ஹோம் /நியூஸ் /உலகம் /

இளவரசர் பட்டத்தை துறந்தது ஏன்? முதன்முறையாக விளக்கமளித்த இங்கிலாந்து மகாராணியின் பேரன் ஹாரி

இளவரசர் பட்டத்தை துறந்தது ஏன்? முதன்முறையாக விளக்கமளித்த இங்கிலாந்து மகாராணியின் பேரன் ஹாரி

ஹாரியும், மார்கலும்

ஹாரியும், மார்கலும்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  வேறு வழி இல்லாததால்தான் அரச குடும்ப பொறுப்புகளை துறப்பதாக இங்கிலாந்து மகாராணியின் பேரன் ஹாரி மவுனம் கலைத்துள்ளார். 

  அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் என்ற பொறுப்புகளை துறப்பதாக ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் அண்மையில் அறிவித்திருந்தனர். இது உலகம் முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய சூழலில் முதல்முறையாக இதுகுறித்து ஹாரியே லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற எச்.ஐ.வி. பாதித்தோருக்கான நிதி திரட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஹாரி, தாங்கள் அரச குடும்பத்தில் இருந்து வெளியேறுவது குறித்து இளவரசராக இல்லாமல் ஹாரியாக சொல்ல விரும்புகிறேன் என்று கூறி உரையைத் தொடங்கினார். ராணி இரண்டாம் எலிசபெத் மீது தமக்கு மிகுந்த மரியாதை உள்ளதாகவும், அவரது ஆணைக்கு கீழ்படிந்து நடப்பேன் என்றும் ஹாரி குறிப்பிட்டார். வேறு வழி இல்லாததாலேயே அரச பதவிகளை துறந்ததாகவும் அவர் மிகுந்த வேதனையுடன் தெரிவித்தார்.

  பிரிட்டன் அரச குடும்பத்தில் இருந்து விலக வேண்டும் என்ற முடிவு சாதாரணமாக எடுக்கப்பட்டது இல்லை. பல மாதமாக நடைபெற்ற பேச்சுவார்த்தை மற்றும் பலகட்ட போராட்டங்களுக்கு பின்னரே இந்த முடிவ எடுத்தோம். நான் எடுத்த முடிவுகள் எப்போதும் சரியானது என்று நான் சொல்லவில்லை. ஆனால் இந்த விஷயத்தில் வேறு வழியில்லை. ராணி, காமன்வெல்த், ராணுவத்திற்கு பொது நிதியை பயன்படுத்தாமல் சேவை செய்ய விரும்பினேன். ஆனால் அது சாத்தியமாகவில்லை.

  எங்கிருந்தாலும், என்ன செய்தாலும் நாட்டிற்கான தங்களது சேவை தொடரும் என்றும் ஹாரி கூறினார். 23 ஆண்டுகளுக்கு முன்பு தாயை இழந்த தனக்கு, இத்தனை நாட்களும், அன்பும் அரவணைப்பும் வழங்கிய நாட்டு மக்களுக்கு நன்றி என ஹாரி தெரிவித்தார்.

  முன்னதாக பிரிட்டன் அரச குடும்ப பொறுப்புகளை துறப்பதாக ஹாரி எடுத்த முடிவிற்கு, ராணி இரண்டாம் எலிசபெத் அனுமதி வழங்கினார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தனது பேரனின் குடும்பம் சுதந்திரமான வாழ்க்கையை தேர்ந்தெடுத்துள்ளதற்கு ஆதரவளிப்பதாக கூறியுள்ளார். பொதுமக்களின் வரிப்பணம், அரச பட்டங்களை இனி அவர்கள் பயன்படுத்த முடியாவிட்டாலும், ஹாரி, அவரது மனைவி மேகன், அவர்களின் மகன் ஆர்ச்சி ஆகியோர் எப்போதும் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் தான் என ராணி உருக்கமாக கூறியிருந்தார். குறிப்பாக திருமணமாகி வந்த சில மாதங்களிலேயே அரச குடும்பத்தில் மேகன் இரண்டறக் கலந்துவிட்டதாகவும் ராணி தெரிவித்திருந்தார். மேலும், பெர்க்சைரில் உள்ள ஹாரியின் வீட்டை சீரமைக்க பயன்படுத்தப்பட்ட மக்களின் வரிப்பணமான 23 கோடி ரூபாயை அவர் திருப்பியளிக்க விரும்புவதாகவும் அறிக்கையில் ராணி குறிப்பிட்டிருந்தார்.

  Also see:

  Published by:Karthick S
  First published:

  Tags: Britain