ஒசாமா பின்லேடன் குடும்பத்தினரிடமிருந்து ஒரு மில்லியன் பவுண்ட் இளவரசர் சார்லஸ்யின் அறக்கட்டளைக்கு நன்கொடையாக அளிக்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகி உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2001 இல் அமெரிக்காவில் நடந்த இரட்டை கோபுர தாக்குதலுக்குக் காரணமாக இருந்த ஒசாமா பின்லேடன் உலகில் பெரும் தீவிரவாதி அமைப்பான அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவராக இருந்தவர். இதையடுத்து ஒசாமா பின்லேடன் பதுங்கியிருந்த ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்க படையெடுத்தது. இதையடுத்து ஒசாமா அங்கிருந்து பாகிஸ்தானுக்கு தப்பி சென்றார். 2011 இல் பாகிஸ்தானுள் சென்று பின்லேடனை அமெரிக்க படை அவரை கொன்றனர். தற்போது அவரின் குடும்பத்தினரிடமிருந்து இங்கிலாந்தின் இளவரசரான சார்லஸ்யின் அறக்கட்டளைக்கு 1 மில்லியன் பவுண்ட் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
Also Read : அல்கொய்தா தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி ட்ரோன் தாக்குதலில் உயிரிழப்பு.. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு
சண்டே டைம்ஸ் என்ற இதழில் இது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இந்த நன்கொடை பெறுவது ராயல் ஆலோசகர்கள் மறுத்த நிலையிலும் பெறப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஒசாமா பின்லேடன் குடும்பமான பக்ர் பின்லேடன் மற்றும் ஷபீக் இடமிருந்து அறக்கட்டளைக்கு (Prince of Wales Charitable Fund) நன்கொடையைப் பெற இளவரசர் 2013இல் லண்டனில் சந்தித்த போது ஒப்புக்கொண்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகளவில் இந்த செயல் குறித்து தகவல் வெளியானதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இளவரசர் சார்லஸ் தரப்பிலிருந்து எந்த தகவலும் அளிக்கப்படவில்லை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.