Home /News /international /

எலிசபெத் ராணி மறைவு.. இளவரசர் சார்லெஸ் மன்னர் ஆனார்

எலிசபெத் ராணி மறைவு.. இளவரசர் சார்லெஸ் மன்னர் ஆனார்

பிரிட்டன் மன்னர் சார்லஸ்

பிரிட்டன் மன்னர் சார்லஸ்

பிரிட்டன் அரியணை பொறுப்புக்கு மன்னர் சார்லஸ் வந்துள்ளதால் அந்நாட்டின் தேசிய கீதத்தின் வரிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • inter, IndiaLondonLondon
    பிரிட்டன் ராணி எலிசபெத் மறைவைத் தொடர்ந்து, அவரின் மூத்த மகனான சார்லஸ் மன்னராக பொறுப்பேற்றுள்ளார். 70 ஆண்டு காலம் பிரிட்டனை ஆண்ட எலிசபெத் அந்நாட்டு வரலாற்றில் அதிக ஆண்டுகள் ஆண்ட ராணி என்ற பெருமையைப் பெற்றவர். இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஸ்கார்ட்லாந்தில் உள்ள பால்மாரல் அரண்மனையில் மருத்துவ சிகிச்சை பெற்றுவந்தார். கவலைக்கிடமாக இருந்த ராணி சிகிச்சை பலனிற்றி நேற்று பிற்பகல் உயிரிழந்துள்ளார். இவருக்கு வயது 96.

    ராணியின் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் அஞ்சலி தெரிவித்துவருகின்றனர்.ராணியின் மறைவை தொடர்ந்து அவரின் மூத்த மகன் சார்லஸ் புதிய மன்னராக பொறுப்பேற்றுக்கொண்டார். ராணி இறந்த 24 மணிநேரத்திற்குள் செயின்ட் ஜேம்ஸ் அரண்மனையில் உள்ள பிரைவி கவுன்சில் முன் சார்லஸ் புதிய மன்னராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவரது மனைவி கமீலா சார்லஸ் ராணியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

    இவருக்கு அதிகாரப்பூர்வமாக முடிசூட்டும் விழா இன்னும் சில நாள்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு பிரம்மாண்ட ஏற்பாடுகளுடன் நடைபெறும் எனக் கூறப்படுகிறது. ராணியின் மூத்த வாரிசாக 73 வயதில் சார்லஸ் முடிசூட்டிக்கொள்கிறார். மிக அதிகமான வயதில் பிரிட்டன் அரியணையில் அமரும் வாரிசு என்ற பெருமை சார்லசுக்கு இதன் மூலம் கிடைத்துள்ளது.

    இதையும் படிங்க: ராணி எலிசபெத் மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் புகழ் அஞ்சலி

    ஆனால், மறைந்த ராணி எலிசபெத் மிகக் குறைந்த வயதான 25 வயதில் பட்டம் சூட்டிக்கொண்டு சுமார் 70 ஆண்டுகாலம் அரியணையில் அமர்ந்திருந்தார். பிரிட்டன் நாட்டின் தேசிய கீதம் God save the Queen என்று தொடங்கும். தற்போது ராணியின் மறைவுக்குப்பின் மன்னர் பொறுப்புக்கு வந்துள்ள நிலையில், God save the King என தேசிய கீதத்தின் வரிகள் மற்றப்பட்டுள்ளன.
    Published by:Kannan V
    First published:

    Tags: Britain, London, Queen Elizabeth

    அடுத்த செய்தி