இளவரசர் ஆண்ட்ரூ பொதுவாழ்க்கையில் இருந்து விலகல்... பாலியல் குற்றச்சாட்டால் பதவி விலகுவதாக அறிவிப்பு!

இளவரசர் ஆண்ட்ரூ பொதுவாழ்க்கையில் இருந்து விலகல்... பாலியல் குற்றச்சாட்டால் பதவி விலகுவதாக அறிவிப்பு!
இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூ
  • News18
  • Last Updated: November 21, 2019, 2:33 PM IST
  • Share this:
இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூ, தன் மீதான பாலியல் குற்றச்சாட்டு எதிரொலியாக பொதுவாழ்க்கையில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இங்கிலாந்து ராணியின் இளைய மகனான ஆண்ட்ரூ, 17 வயது சிறுமியுடன் தகாத உறவு வைத்திருந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு அமெரிக்க நிதி நிறுவன அதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன் உடந்தையாக இருந்ததாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், ஜெப்ரி எப்ஸ்டீனுடனான தனது தொடர்பு அரச குடும்பத்தில் பாதிப்பை ஏற்படுத்திவிட்டதாகவும், ராணியின் ஒப்புதலுடன் பொதுவாழ்க்கையில் இருந்து விலகுவதாகவும் இளவரசர் ஆண்ட்ரூ அறிவித்துள்ளார்.


Also see...
First published: November 21, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்