• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • வாடகைக்கு விடப்படும் பிரதமர் பங்களா - நிதி நெருக்கடியால் பாகிஸ்தான் வி.வி.ஐ.பி. களுக்கு இனி சாதாரண வீடுதான்

வாடகைக்கு விடப்படும் பிரதமர் பங்களா - நிதி நெருக்கடியால் பாகிஸ்தான் வி.வி.ஐ.பி. களுக்கு இனி சாதாரண வீடுதான்

பாகிஸ்தான் பிரதமர் மாளிகை

பாகிஸ்தான் பிரதமர் மாளிகை

பாகிஸ்தானின் நடப்பு கணக்கு பற்றாக்குறை 1800 கோடி டாலராக உள்ளது.

  • Share this:
    நிதி நெருக்கடி காரணமாக பாகிஸ்தான் பிரதமரின் பங்களா திருமணம் உள்ளிட்ட விழாக்களுக்கு வாடகைக்கு விடப்படுகிறது. மேலும், ஆளுநர் உள்ளிட்ட வி.வி.ஐ.பி.க்கள் இனி சொகுசு பங்களாவில் வசிக்க மாட்டார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

    பாகிஸ்தான் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், “ஆளுநர் உள்ளிட்ட வி.வி.ஐ.பி. க்கள் இனி அரசு சொகுசு பங்களாவில் வசிக்க மாட்டார்கள். மாறாக, சாதாரண வீடுகளில்தான் வசிப்பார்கள். இதனால், மீதமாகும் பணத்தை வைத்து மக்கள் நல திட்டங்கள் செயல்படுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து, பிரதமர் இம்ரான் கான் இஸ்லாமாபாதில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ பங்களாவை காலி செய்து மூன்று அறைகள் அடங்கிய வீட்டில் குடியேறியுள்ளார்.

    பாகிஸ்தான் பிரதமரின் பங்களாவை பராமரிக்க அதிக பணம் செலவிட வேண்டி இருக்கிறது. எனவே, திருமணம் உள்ளிட்ட விழாக்களுக்கு பிரதமர் பங்களா வாடகைக்கு விடப்பட்டு வருவது தெரியவந்துள்ளது. சமீபத்தில், இம்ரான் கானின் ராணுவ செயலர் வாசிம் இப்திகாரின் மகளின் திருமணம் பிரதமர் பங்களாவில் ஆடம்பரமாக நடந்தது. அந்தி விழாவில், இம்ரான் கானும் பங்கேற்றார். இந்நிலையில், கடும் நிதி நெருக்கடியை சமாளிக்க பிரதமர் பங்களா ஆளுநர் மாளிகை ஆகியவற்றை வாடகைக்கு விட முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

    இம்ரான் கான்


    இம்ரான் கான் 2018-ல் பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றது முதலே, பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடிக்கும் ஆளாகியுள்ளது. கடுமையான கடன் சுமையால் சிக்கல் ஒருபுறமும், பொருளாதார வீழ்ச்சி மறுபுறமும் என இரட்டை சிக்கலை சந்தித்து வருகிறது. இதனால், அந்நாட்டு ராணுவத்திற்கும் நிதி ஒதுக்கீட்டை குறைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    பாகிஸ்தானின் நடப்பு கணக்கு பற்றாக்குறை 1800 கோடி டாலராக உள்ளது. ஆசியாவிலேயே மிகவும் மதிப்பிழந்த கரன்சியான பாகிஸ்தானின் ரூபாய், ஒரு டாலருக்கு 150 ரூபாய் என்ற அளவில் சரிந்தது. பாகிஸ்தானில், டொயோட்டா கார் உற்பத்தி ஆலை, பவர் சிமென்ட் நிறுவனம், நெஸ்ட்லே உட்பட பல ஆலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளன. அங்கே, ஏராளமானோர்க்கு வேலையிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    பாகிஸ்தான் சர்வதேச நிதியமானத்தில் (IMF) கடன் வாங்க முயன்றது. ஆனால் முதலில் தருவதாக ஒப்புக் கொண்ட 600 கோடி டாலரை வழங்குவதற்கு ஐ.எம்.எப். தயக்கம் காட்டியது. பிரான்ஸ் நாட்டின் நிதி கட்டுப்பாட்டு அமைப்பு கருப்பு பட்டியலுக்கு முந்தைய பட்டியலில் பாகிஸ்தானை வைத்துள்ளது. இதனால் உலக நாடுகளின் நிதி உதவி கிடைக்காமல் பாகிஸ்தான் நிதி நெருக்கடிக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

    Must Read : ஆப்கானிஸ்தானில் கடுமையான போர்... முக்கிய நகரங்களை கைப்பற்ற தாலிபன்கள் தீவிரம்

    இந்நிலையில், பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், பணம் திரட்டவும் புதிய திட்டத்தை அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் அறிவித்தார். எனினும் பாகிஸ்தான் மக்கள் உரய வரியை கட்டாததால் நாடு பெரும் நெருக்கயில் சிக்கித் தவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: