’மாபெரும் வெற்றிக்கு வாழ்த்துகள்... இணைந்து பணியாற்றுவோம்’- மோடிக்கு இலங்கை பிரதமர் வாழ்த்து

ரணில் விக்ரமசிங்கே

பாஜக பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும் எனக் கூறப்பட்டு வருகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
மோடியின் இமாலய வெற்றிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதாக தெரிவித்துள்ளார் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே.

இந்திய மக்களவைத் தேர்தல் 2019-ல் ஆளும் கட்சியான பாஜக கூட்டணி இன்று பல இடங்களிலும் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகித்து வருகிறது. பாஜக பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும் எனக் கூறப்பட்டு வருகிறது.

இன்னும் வெற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மோடிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தனது ட்விட்டர் பக்கத்தில், “மாபெரும் வெற்றிக்கு வாழ்த்துகள் நரேந்திர மோடி! இனிவரும் நாட்களில் தங்களுடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.மேலும் பார்க்க: மே 30-ம் தேதி ஆந்திர முதல்வராகப் பதவியேற்கிறார் ஜெகன் மோகன் ரெட்டி!
தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.Published by:Rahini M
First published: