“யாதும் ஊரே.. யாவரும் கேளிர்..“ ஐ.நா-வில் தமிழில் முழங்கிய பிரதமர் மோடி - வீடியோ

“யாதும் ஊரே.. யாவரும் கேளிர்..“ ஐ.நா-வில் தமிழில் முழங்கிய பிரதமர் மோடி - வீடியோ
பிரதமர் மோடி
  • News18 Tamil
  • Last Updated: September 27, 2019, 9:36 PM IST
  • Share this:
ஐநா சபைக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி “யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற கணியன் பூங்குன்றனாரின் பாடலை குறிப்பிட்டு பேசினார்.

ஐக்கிய நாடுகள் சபையின் ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் உலக நாடுகளின் தலைவர்ள் முன்னிலையில் பேசிய பிரதமர் மோடி, 130 கோடி மக்களின் பிரதிநிதியாக இங்கு பேசுவதில் மகிழ்ச்சி என பெருமி்தத்துடன் கூறினார்.

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 5 ஆண்டுகளில் 11 கோடி கழிப்பறைகளை கட்டி  உலகுக்கே முன்மாதிரியாக இந்தியா திகழ்வதாக கூறிய மோடி, 2025-ம் ஆண்டுக்குள் காச நோய் இல்லாத நாடாக இந்தியா  மாறும் என்றும் 2021-க்குள் 2 கோடி வீடுகள் ஏழைகளுக்கு கட்டித் தரப்படும் என்றும் தெரிவித்தார்.


மோடி தனது உரையின் போது தமிழ் புலவர் கணியன் பூங்குன்றனரின் “யாதும் ஊரே யாவரும் கேளிர்“ என்ற பாடல் வரியை குறிப்பிட்டு விளக்கினார்.  பயங்கரவாதம் என்பது தனியொரு நாட்டின் பிரச்னை அல்ல என்றதுடன் அதை எதிர்க்க உலக நாடுகள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

 

வீடியோ:
First published: September 27, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்