திருக்குறளை தாய்லாந்து மொழியில் வெளியிடுகிறார் பிரதமர் மோடி

திருக்குறளை தாய்லாந்து மொழியில் வெளியிடுகிறார் பிரதமர் மோடி
  • News18
  • Last Updated: November 2, 2019, 9:05 AM IST
  • Share this:
3 நாள் பயணமாக இன்று தாய்லாந்து செல்லும் பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு மொழியில் எழுதப்பட்ட திருக்குறளை வெளியிடுகிறார்.

இன்று காலை டெல்லியில் இருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காங் செல்லும் பிரதமர் மோடி, ஆசியான் மாநாடு, கிழக்காசிய மாநாடு மற்றும் கூட்டுப் பொருளாதார மாநாடு ஆகியவற்றில் கலந்துக் கொள்கிறார். தாய்லாந்தில் குருநானக்கின் 550வது பிறந்தநாளையொட்டி நாணயம் ஒன்றையும், திருக்குறளின் தாய்லாந்து மொழி பெயர்ப்பையும் மோடி வெளியிட உள்ளார்.

இதையடுத்து இந்திய வம்சாவளியினருடனும் இன்று அவர் கலந்துரையாட திட்டமிட்டுள்ளார். நாளை ஆசியான் மாநாட்டில் உரையாற்றும் பிரதமர் மோடி, தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓ சாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.


இதைத்தொடர்ந்து தாய்லாந்து பிரதமர் அளிக்கும் சிறப்பு விருந்திலும் அவர் கலந்து கொள்கிறார். பின்னர் 14-வது கிழக்காசிய மாநாட்டிலும் மோடி பங்கேற்க உள்ளார். இந்த மாநாடுகளுக்கு இடையில் ஆசிய நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு உறவுகள் குறித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துவார்.

இறுதியாக 3-வது பிராந்திய அளவிலான விரிவான கூட்டுப் பொருளாதார உச்சி மாநாட்டிலும் பிரதமர் கலந்து கொள்ள இருக்கிறார்.

Also watch
First published: November 2, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்