பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று ஐ.நா. பாதுகாப்பு சபை கவுன்சில் கூட்டம்

பிரதமர் நரேந்திர மோடி

கடல்சார் பாதுகாப்பு, அமைதிகாப்பு உள்ளிட்டவை தொடர்பான முக்கிய ஆலோசனை நடைபெறுகிறது.

  • Share this:
    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று ஐ.நாவின் பாதுகாப்பு சபை கூட்டம் வீடியோ கான்பரன்சிங் முறையில் நடைபெறுகிறது.

    இது குறித்து வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஐ.நா. பாதுகாப்பு சபை கூட்டம் இன்று (திங்கள் கிழமை) வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாட்டின் தலைவர்கள் வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்து கொள்கின்றனர்.

    இநத்க் கூட்டத்தில் கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் அது தொடர்பான சர்வதேச ஒத்துழைப்பு குறித்த கருத்தரங்கில் விவாதிக்கப்பட உள்ளது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் ஆகஸ்ட்டு மாதத்துக்கான தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றது. இதனால், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகிக்கும் முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையைப் நரேந்திர மோடி பெற்றுள்ளார்.

    நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, சீனா ஆகிய 5 நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. 10 நாடுகள் தற்காலிக உறுப்பினர்களாக 2 ஆண்டுகாலம் செயல்படும். இதில் இந்தியா தற்காலிக உறுப்பினராக கடந்த ஜனவரி மாதத்தில் பொறுப்பேற்றது.

    பாதுகாப்பு சபையின் தலைமைப் பொறுப்பை சுழற்சி முறையில் உறுப்பு நாடுகள் ஏற்றுக் கொள்வது வழக்கம், இந்நிலையில், 75ஆவது சுதந்திர தினத்தை இந்தியா கொண்டாட உள்ள நிலையில், தலைமைப் பொறுப்பை ஏற்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக ஐ.நா. சபையின் தலைவராக பொறுப்பேற்றுள்ள ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி பெருமிதம் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், கடல்சார் பாதுகாப்பு, அமைதிகாப்பு உள்ளிட்டவை தொடர்பான முக்கிய ஆலோசனைகளும், சிரியா உள்ளிட்ட நாடுகளின் விவகாரங்கள் குறித்த ஆலோசனைகளும் நடைபெறும் என்று டி.எஸ்.திருமூர்த்தி தெரிவித்திருந்தார்.

    Must Read : கேரளாவில் சுற்றுலா தலங்களுக்கு இன்று முதல் அனுமதி - சமூக ஆர்வலர்கள் கண்டனம்

    1992ஆம் ஆண்டில் ஐ.நா. பாதுகாப்பு சபை கூட்டத்தில் அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ் கலந்துகொண்டார். ஆயினும், முதல் முறையாக பாதுகாப்பு சபையின் கூட்டத்துக்கு தலைமை வகிக்கும் இந்தியப் பிரதமர் என்ற பெருமையை நரேந்திர மோடி பெற்றுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு முதன்முறையாக 1950ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இந்தியா தலைமை வகித்தது. இதனைத் தொடர்ந்து, 10ஆவது முறையாக இந்தியா தற்போது தலைமை வகிக்கிறது. இதற்கு முன்னதாக 2012ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்தியா தலைமையில் ஐ.நா. பாதுகாப்பு சபை செயல்பட்டது.
    Published by:Suresh V
    First published: