தாய்லாந்தில் திருக்குறளை மேற்கோள் காட்டி தமிழ், இந்தியில் பேசிய பிரதமர் மோடி

தாய்லாந்தில் திருக்குறளை மேற்கோள் காட்டி தமிழ், இந்தியில் பேசிய பிரதமர் மோடி
  • News18
  • Last Updated: November 3, 2019, 8:37 AM IST
  • Share this:
தாய்லாந்தில் அந்நாட்டு மொழியில் திருக்குறள் நூலை வெளியிட்ட பிரதமர் மோடி, மொழி மற்றும் உணர்வு அடிப்படையில் இந்தியாவும் தாய்லாந்தும் ஒன்று என தெரிவித்தார்.

தாய்லாந்துக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி, தலைநகர் பாங்காக்கில் நடைபெற்ற சவாஸ்தி பிஎம் மோடி எனும் இந்திய வம்சாவளியினர் பங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது தாய்லாந்து மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறளை அவர் வெளியிட்டார்.

மேலும் சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக்கின் 550-வது பிறந்த நாளையொட்டி நினைவு நாணயத்தையும் வெளியிட்டார்.

பின்னர் அங்கு திரண்டிருந்த ஏராளமான இந்திய வம்சாவளி மக்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வணக்கம் என்று கூறி உரையை தொடங்கினார். தொடர்ந்து பேசிய அவர், இந்தியா-தாய்லாந்து இடையே நிலவும் சிறந்த நட்புறவை கண்டு நான் மிகவும் பெருமைப்படுகிறேன். தாய்லாந்தில் இருப்பது எனது சொந்த வீட்டில் இருப்பது போன்ற உணர்வை தரருகிறது. இந்தியாவுடன் தாய்லாந்து அரச குடும்பத்தினருக்கு இருக்கும் உறவு, இருநாடுகள் இடையேயான வரலாற்று ரீதியிலான உறவுகளையும், ஆழ்ந்த நட்புறவையும் வெளிப்படுத்துகிறது.

மேலும் மொழியின் அடிப்படையில் மட்டுமல்லாமல், உணர்வுகள் அடிப்படையிலும் இந்தியாவும், தாய்லாந்தும் ஒன்றே எனக் கூறிய பிரதமர் மோடி, தற்போதைய நாட்களில் ஒரு இந்தியர் ஏதாவது சொல்லும்போது, அதை இந்த உலகம் உன்னிப்பாக கேட்பதாகவும் தெரிவித்தார்.

இதேபோல் இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. இந்த ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில், வரலாற்றில் முதல் முறையாக 60 கோடி வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். இதற்காக ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்பட வேண்டும் என்றார். முன்னதாக, தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு என்ற திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசினார்.

இதையடுத்து பிரதமர் மோடி, இன்று நடைபெறும் ஆசியான்-இந்தியா உச்சிமாநாட்டில் பங்கேற்று உரையாற்ற இருப்பதோடு, இந்தியா, சீனா உள்ளிட்ட 16 நாடுகளின் உச்சிமாநாடு மற்றும் 14-வது கிழக்காசிய உச்சி மாநாடு ஆகியவற்றிலும் பங்கேற்க உள்ளார்.

Also watch

First published: November 3, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்