நேபாளம் நம்பிக்கை வாக்கெடுப்பு - பிரதமர் கே.பி.சர்மா ஒலி வெற்றி

news18
Updated: March 12, 2018, 8:48 AM IST
நேபாளம் நம்பிக்கை வாக்கெடுப்பு - பிரதமர் கே.பி.சர்மா ஒலி வெற்றி
நேபாள நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் கே.பி.சர்மா ஒலி வெற்றி
news18
Updated: March 12, 2018, 8:48 AM IST
நேபாளத்தில்  நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் மூன்றில் இரண்டு மடங்கு உறுப்பினர்களின் ஆதரவுடன் அந்நாட்டு பிரதமர் கே.பி.சர்மா ஒலி வெற்றி பெற்றுள்ளார்.

மன்னர் ஆட்சியின் கீழ் இருந்த நேபாளம், பெரும் மக்கள் போராட்டத்திற்கு பிறகு குடியரசு நாடாது. 2015-ம் ஆண்டு நேபாளின் புதிய அரசியல் சாசனம் நிறைவேற்றப்பட்டது. அதில், பிரதிநிதிகள் சபை, தேசிய சபை என்று இரண்டு சபைகள் கொண்ட நாடாளுமன்றம் அமைக்கப்பட்டது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மூன்று கட்டங்களாக நடந்த தேர்தலில் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மாவோயிஸ்ட் கட்சிகள் இணைந்த கூட்டணி அமோக வெற்றி பெற்றது. ஆளும் நேபாள காங்கிரஸ் கட்சி கூட்டணி படு தோல்வியடைந்தது. இந்நிலையில், நாடாளுமன்ற  மேல்சபைக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. 6 மாகாணங்களிலும் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மொத்தம் உள்ள 59 இடங்களில் இடதுசாரிகள் கூட்டணி 39 இடங்களில் வென்றது.

நேபாள கம்யூனிஸ்ட் கட்சி 27 இடங்களையும், மாவோயிஸ்ட் சென்டர் கட்சி 12 இடங்களையும் கைப்பற்றின. நேபாள காங்கிரஸ் கட்சி 13 இடங்களிலும், இதர கட்சிகள் நான்கு இடங்களிலும் வெற்றி பெற்றன. இந்நிலையில் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான கே.பி.சர்மா ஒலி அந்நாட்டின் பிரதமராக கடந்த மாதம் 15ம் தேதி நியமிக்கப்பட்டார். புதிய அரசியலமைப்பு சட்டத்தின் படி புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுபவர் 6 மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற வேண்டும் என்ற விதி அங்கு அமலில் உள்ளது.

அதன்படி, நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் மூன்றில் இரு மடங்கு உறுப்பினர்களின் ஆதரவுடன் சர்மா ஒலி வெற்றி பெற்றார். மொத்தமுள்ள 275 உறுப்பினர்களில் 208 பேர் சர்மாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
First published: March 12, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்