• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  •  சீனா வறுமையை ஒழித்துவிட்டதாக அதிபர் ஜி ஜின்பிங் அறிவிப்பு

 சீனா வறுமையை ஒழித்துவிட்டதாக அதிபர் ஜி ஜின்பிங் அறிவிப்பு

ஜி ஜின்பிங்

ஜி ஜின்பிங்

சீனாவில் வறுமையை ஒழித்துவிட்டதாக அந்நாட்டின் அதிபர் ஜி ஜின்பெங் அறிவித்துள்ளார். உண்மையில் அப்படி ஒரு அதிசயம் நிகழ்ந்துள்ளதா...?

  • Share this:
    உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனா,  ஒரு காலத்தில் வறுமையின் கோர பிடியில் சிக்கி கடும் பின்னடைவை சந்தித்தது. 1970-களில், சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட உலக மயமாக்கல் காரணமாக அந்நாடு பெரும் வளர்ச்சியை தொடர்ந்து பதிவு செய்தது. இந்நிலையில், சீனாவில் வறுமை ஒழிப்புக்காகப் பாடுப்பட்டவர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி பெய்ஜிங்கில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அதிபர் ஜி ஜின்பிங், நாட்டின் வறுமையை ஒழிக்க கடந்த 40 ஆண்டுகளாக நடந்த போராட்டம் முழு வெற்றிபெற்று, 77 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டுள்ளதாக தெரிவித்தார்.  கிராமப்புறங்களில் அனைவரும் வறுமையில் இருந்து மீட்கப்பட்டு உள்ளதகாவும், இந்த அதிசயம் வரலாற்றில் முக்கிய இடம் பெறும் என்றும் குறிப்பிட்டார்.

    கடந்த 40 ஆண்டுகளில் உலக அளவில் வறுமையில் இருந்து மீட்கப்பட்டவர்களில், 70 சதவிகித்தனருக்கும் அதிகமானோர் சீனாவை சேர்ந்தவர்கள் என்றார். இதன் மூலம், 2030-க்குள் வறுமையை ஒழிக்க வேண்டும் என்ற ஐ.நா. சபையின் கெடுவை, 10 ஆண்டுகளுக்கு முன்னதாகவே சீனா நிகழ்த்திக் காட்டியுள்ளது எனவும் குறிப்பிட்டார்.

    உலக வங்கியின் அறிவுறுத்தலின் படி, நாள் ஒன்றிற்கு இந்திய மதிப்பில் 138 ரூபாய்க்கும் கீழ் வருவாயாக கொண்டவர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் இருப்பவர்களாக கருதப்படுகின்றனர். ஆனால், 123 ரூபாய்க்கு குறைவான வருவாய் கொண்டவர்களை மட்டுமே வறுமைக் கோட்டிற்கு கீழ் இருப்பவர்களாக சீனா குறிப்பிடுவதால், வறுமையில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளதாக கூறப்படுகிறது.

    மேலும் படிக்க...நீரவ் மோடி நாடு கடத்தல் வழக்கில் இங்கிலாந்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

    மேலும், அங்கு அதிகரித்துள்ள ஊழல் மற்றும் அதிகரித்துள்ள அரசியல் தலையீடுகள் காரணமாகச் சீனாவின் தற்போதைய கூற்று நம்பும் வகையில் இல்லை என, மேற்கத்தியப் பொருளாதார வல்லுநர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். சீனாவில், தற்போதும் வருமான ஏற்றத்தாழ்வுகள் பரவலாக இருப்பதாகவே அவர்கள் தெரிவிக்கின்றனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: