ஹோம் /நியூஸ் /உலகம் /

அமெரிக்க ரகசியங்களை அம்பலப்படுத்திய எட்வெர்ட் ஸ்னோடெனுக்கு ரஷ்ய குடியுரிமை.. அதிபர் புதின் அறிவிப்பு

அமெரிக்க ரகசியங்களை அம்பலப்படுத்திய எட்வெர்ட் ஸ்னோடெனுக்கு ரஷ்ய குடியுரிமை.. அதிபர் புதின் அறிவிப்பு

எட்லெர்ட் ஸ்னோடென்னுக்கு ரஷ்யா குடியுரிமை

எட்லெர்ட் ஸ்னோடென்னுக்கு ரஷ்யா குடியுரிமை

அமெரிக்கா அரசு அறிவித்த நிலையில், தன்னை அமெரிக்கா கைது செய்து விடக்கூடாது என்பதற்காக 2013க்குப் பின் ரஷ்யாவில் தஞ்சம் புகுந்தார் ஸ்னோடென்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • inter, IndiaMoscowMoscow

  அமெரிக்காவின் பாதுகாப்பு ரகசியங்களை அம்பலப்படுத்திய எட்வெர்ட் ஸ்னோடெனுக்கு ரஷ்ய தன்னாட்டு குடியுரிமையை வழங்கியுள்ளது. அமெரிக்காவின் உளவுத்துறையில் பணியாற்றிய நபர் எட்வெர்ட் ஸ்னோடென். இவர் கடந்த 2013ஆம் ஆண்டில் அமெரிக்காவின் உளவு துறை குறித்த ரகசிய ஆவணங்களை பொதுவெளியில் வெளியிட்டு அம்பலப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தினார். அமெரிக்கா அரசு தேச பாதுகாப்பு மற்றும் உளவுத்துறைக்காக சொந்த நாட்டு மக்களையே உளவு பார்க்கிறது என்ற பகீர் குற்றச்சாட்டுடன் ஆவணங்களை இவர் வெளியிட்டார். இது அமெரிக்க அரசாங்கத்தை மட்டுமல்லாது சர்வதேச நாடுகள் மத்தியிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

  தேச துரோக வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக எட்வெர்ட் ஸ்னோடெனை அமெரிக்கா அரசு அறிவித்த நிலையில், தன்னை அமெரிக்கா கைது செய்து விடக்கூடாது என்பதற்காக 2013க்குப் பின் ரஷ்யாவில் தஞ்சம் புகுந்தார் ஸ்னோடென். அமெரிக்காவின் பரம எதிரி நாடான ரஷ்யா இத்தனை ஆண்டுகள் ஸ்னோடெனுக்கு அடைக்கலம் கொடுத்துவந்த நிலையில், 2020ஆம் ஆண்டு அமெரிக்க நாட்டின் குடியுரிமைக்காக விண்ணப்பித்துள்ளதாக ஸ்னோடென் தெரிவித்திருந்தார்.இந்நிலையில் ஸ்னோடெனுக்கு தற்போது ரஷ்ய குடியுரிமை வழங்கி அந்நாட்டு அதிபர் விளாதிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார்.

  ஒருவர் தன்னாட்டின் குடியுரிமையை முழுமையாக துறக்காமல் ரஷ்ய நாட்டு குடியுரிமையை பெற முடியாது என்ற விதி ரஷ்யாவில் இருந்து வந்தது. இதை சில ஆண்டுகளுக்கு முன்னர் மாஸ்கோ தளர்த்தியுள்ளது. எட்வெர்ட் ஸ்னோடெனும் இதுவரை அமெரிக்க நாட்டின் குடியுரிமையை துறக்கவில்லை. அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்குமான பூசலானது உக்ரைன் போருக்குப் பின்னர் மீண்டும் உச்சம் தொட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்கவை சீண்டி பார்க்கும் விதமாகவே ரஷ்யா ஸ்னோடெனுக்கு குடியுரிமையை தந்துள்ளது.

  இதையும் படிங்க: அவளுக்கு 12 வயது... எனக்கு 30 வயது... சர்ச்சையாக பேசி சிக்கிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

  இதைத்தொடர்ந்து ஸ்னோடெனின் மனைவி லின்ட்சே மில்சும் ரஷ்ய நாட்டு குடியுரிமைக்கான விண்ணப்பிப்பார் என ஸ்னோடென்னின் வழக்கறிஞர் அனடோலி குச்னேரா தெரிவித்துள்ளார். இருவரின் மகள் ரஷ்யாவில்தான் பிறந்தார் என்பதால் அவருக்கு ஏற்கனவே ரஷ்ய நாட்டின் குடியுரிமை கிடைத்துவிட்டது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Russia, USA, Vladimir Putin