காஷ்மீர் விவகாரத்தில் சமரசம் செய்ய தயார்: டிரம்ப் அறிவிப்பு- இந்தியா மறுப்பு!

காஷ்மீர் விவகாரம் குறித்த டிரம்பின் பேச்சு சிறுபிள்ளைத்தனமானது என்று அமெரிக்க எதிர்க்கட்சி எம்பி பிராட் ஷெர்மான் கூறியுள்ளார்.

காஷ்மீர் விவகாரத்தில் சமரசம் செய்ய தயார்: டிரம்ப் அறிவிப்பு- இந்தியா மறுப்பு!
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்
  • News18
  • Last Updated: July 23, 2019, 9:30 AM IST
  • Share this:
காஷ்மீர் விவகாரத்தில் சமரசம் செய்யுமாறு பிரதமர் நரேந்திர மோடி தமக்கு வேண்டுகோள் விடுத்தததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறிய நிலையில், இத்தகவலை இந்தியா மறுத்துள்ளது.

பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான் 3 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்பை இம்ரான்கான் சந்தித்து பேசினார்.

இரு நாட்டு உறவுகள் குறித்து நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, பாகிஸ்தான் பிராந்தியத்தில் அமைதி ஏற்படுத்தவும், தீவரவாத நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் டிரம்ப் வலியுறுத்தினார்.


மேலும், காஷ்மீர் பற்றி தான் கேள்விப் பட்டுள்ளதாகவும், அழகான அந்த இடம் தற்போது யுத்த களமாகியுள்ளதாக கூறிய டிரம்ப், அங்கு அமைதி திரும்ப தான் உதவ தயார் என்றும் கூறியுள்ளார்.

மேலும் இரண்டு வாரங்களுக்கு முன்பு தன்னை சந்தித்த பிரதமர் மோடி இந்த விவகாரத்தில் சமரசம் செய்யுமாறு தன்னைக் கேட்டுக் கொண்டதாகவும் கூறினார்

ஆனால் டிரம்ப் கூறியதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது போன்ற கோரிக்கையை மோடி முன்வைக்கவில்லை என்று வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.காஷ்மீர் விவகாரத்தில் 3-வது நபரின் தலையீட்டை அனுமதிப்பதில்லை என்பதில் இந்தி்யா உறுதியாக உள்ளதாக வெளியுறவு அமைச்சக செய்தியாளர் ரவீஸ்குமார் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இரு தரப்பு பேச்சுவார்த்தை மூலமே இந்த விவகாரத்திற்கு தீர்வு காணப்படும் என்று கூறியுள்ள ரவீஸ்குமார், எல்லை தாண்டிய தீவிரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்துவது ஒன்றே இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக அமையும் என்றும் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.காஷ்மீர் விவகாரம் குறித்த டிரம்பின் பேச்சு சிறுபிள்ளைத்தனமானது என்று அமெரிக்க எதிர்க்கட்சி எம்பி பிராட் ஷெர்மான் கூறியுள்ளார்.

இந்தியாவின் வெளியுறவு கொள்கையை எல்லோரும் அறிந்துள்ளார்கள். காஷ்மீர் விவகாரத்தில், 3-வது நபரை சமரசம் செய்யுமாறு மோடி ஒரு போதும் கேட்டிருக்க மாட்டார் என்றும் ஷெர்மான் கூறியுள்ளார்.

மேலும் படிக்க... அத்திவரதரை தரிசிக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 23, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading