முகப்பு /செய்தி /உலகம் / கொரோனா வைரஸை அமெரிக்கா தோற்கடிக்கும் - அதிபர் டிரம்ப் நம்பிக்கை

கொரோனா வைரஸை அமெரிக்கா தோற்கடிக்கும் - அதிபர் டிரம்ப் நம்பிக்கை

அமெரிக்க அதிபர் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டிரம்ப்

கொரோனா எனும் பயங்கரமான வைரசை அமெரிக்கா நிச்சயம் தோற்கடிக்கும் என, அதிபர் டொனால்டு டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

  • Last Updated :

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், 3 நாட்கள் சிகிச்சைக்கு பின் வெள்ளை மாளிகை திரும்பினார். சிகிச்சைக்கு பின் நேற்று முதல்முறையாக பொது வெளியில் தோன்றினார்.

வெள்ளை மாளிகை முன் திரண்ட அவரது ஆதரவாளர்கள் உற்சாக குரல் எழுப்பி டிரம்பை வரவேற்றனர். ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய டிரம்ப், சிகிச்சைக்கு பின் தாம் நலமுடன் இருப்பதாக கூறினார்.

Also read... பிங்க் நிற கண்கள் - அமெரிக்க துணை அதிபருக்கு கொரோனவா?

கொரோனா எனும் கொடிய வைரஸ் மறைந்து கொண்டிருப்பதாக குறிப்பிட்ட அவர், விரைவில் அது மறைந்துவிடும் என தெரிவித்தார். தமக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக டிரம்ப் கூறினார்.

First published:

Tags: CoronaVirus