• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • தமிழர்களின் நிலங்களை ஒப்படைக்க ராணுவத்துக்கு இலங்கை அதிபர் உத்தரவு

தமிழர்களின் நிலங்களை ஒப்படைக்க ராணுவத்துக்கு இலங்கை அதிபர் உத்தரவு

இலங்கை அதிபர் மைதிரிபால சிரிசேனா

இலங்கை அதிபர் மைதிரிபால சிரிசேனா

  • News18
  • Last Updated :
  • Share this:
    இலங்கையில் வடகிழக்கு மாகாணங்களில் தமிழர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நிலங்களை டிசம்பர் மாதம் 31-ம் தேதிக்குள் திரும்ப ஒப்படைக்க, ராணுவத்திற்கு அந்நாட்டு அதிபர் மைதிரிபால சிறிசேனா உத்தரவிட்டுள்ளார். 

    இலங்கையில் விடுதலை புலிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே 30ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடைபெற்று வந்தது. அதில் 2009-ம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போரில் விடுதலை புலிகள் தோற்கடிக்கப்பட்டனர் . இதனால் உள்நாட்டு போர் முடிவுக்கு  வந்தது.

    இந்த உள்நாட்டு போரின்போது தமிழர்களின் நிலங்களை ராணுவத்தினர் கைபற்றினர். 2009-ல் போர் முடிவுக்கு வந்தபின்பு தனியாருக்கு சொந்தமான நிலங்களை ராணுவத்தினர் திரும்ப ஒப்படைத்தனர். ஆனால் தமிழர்களின் நிலங்களை மட்டும் இலங்கை ராணுவத்தினர் ஒப்படைக்கவில்லை. இதற்குத் தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்துவந்தனர்.

    இந்நிலையில், தமிழர் அமைப்புகள் விடுத்த கோரிக்கையை ஏற்று, வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் ராணுவத்தினர் தமிழர்களின் நிலங்களை ஒப்படைக்க வேண்டும் என இலங்கை அதிபர் சிறிசேனா உத்தரவிட்டுள்ளார். இதற்காக, அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதில் ஏற்கெனவே முல்லைத்தீவு உள்ளிட்ட பகுதிகளில் 85 சதவிகித நிலங்களை ஒப்படைத்துவிட்டதாகவும், தற்போது வடக்கு கிழக்குப் பகுதியில் உள்ள நிலங்களை அவர்களின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டப்பட்டுள்ளாது. இந்த அறிவிப்பு, தமிழர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: