”அமெரிக்காவை மோசடி செய்து சலுகைகளை பெறுகிறது” இந்தியா, சீனா மீது ட்ரம்ப் காட்டம்!

இருநாடுகளும் அமெரிக்காவிடம் இருந்து பல்வேறு சலுகைகளை பெற்று, தங்கள் நாட்டை சூறையாடி வருவதாக ட்ரம்ப் காட்டமாக குறிப்பிட்டார்.

”அமெரிக்காவை மோசடி செய்து சலுகைகளை பெறுகிறது” இந்தியா, சீனா மீது ட்ரம்ப் காட்டம்!
டொனால்ட் ட்ரம்ப்
  • News18
  • Last Updated: October 19, 2019, 12:21 PM IST
  • Share this:
இந்தியாவும், சீனாவும் அமெரிக்காவை மோசடி செய்து சலுகைகளை பெற்று வருவதாக அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக சாடியுள்ளார்.

உலக வர்த்தக மையத்தின் கணக்கெடுப்பின் படி, இந்தியாவும், சீனாவும் வளரும் நாடுகள் பட்டியலில் இருக்கின்றன. இதனால் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளுடனான வர்த்தகத்தில், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில், இதுகுறித்து பேசிய அதிபர் ட்ரம்ப்,  இந்தியாவையும் சீனாவையும் வளரும் நாடுகளாக கருதக்கூடாது என குறிப்பிட்டுள்ளார்.

இருநாடுகளும் அமெரிக்காவிடம் இருந்து பல்வேறு சலுகைகளை பெற்று, தங்கள் நாட்டை சூறையாடி வருவதாக ட்ரம்ப் காட்டமாக குறிப்பிட்டார்.

இதனிடையே வாஷிங்டனில் பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்,  இந்தியா - அமெரிக்கா இடையிலான குழப்பங்கள் விரைவில் பேசித் தீர்க்கப்படும் என விளக்கமளித்தார்.

Also see...
First published: October 19, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்