சாத்தானின் வேலையை தோற்கடித்துவிட்டோம் - கொரோனாவில் இருந்து விடுதலை அடைந்ததாக தான்சானியா அறிவிப்பு

கொரோனாவில் இருந்து விடுதலை அடைந்ததாக தான்சானியா அதிபர் அறிவித்துள்ளார்

சாத்தானின் வேலையை தோற்கடித்துவிட்டோம் - கொரோனாவில் இருந்து விடுதலை அடைந்ததாக தான்சானியா அறிவிப்பு
தான்சானியா அதிபர்
  • News18
  • Last Updated: June 10, 2020, 11:56 AM IST
  • Share this:
நியூசிலாந்தை தொடர்ந்து தங்கள் நாடு கொரோனாவில் இருந்து விடுதலை பெற்று விட்டதாக தான்சானியா அதிபர் அறிவித்துள்ளார். சாத்தானின் வேலையை தான்சானியா தோற்கடித்து விட்டதாகவும் John Magufuli கூறியுள்ளார்.

ஏப்ரல் 29-க்கு பின்னர் கொரோனா தொடர்பான எந்த புள்ளி விபரத்தையும் தான்சானியா வெளியிட வில்லை. அன்றைய நாளின்படி அங்கு 509 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். மேலும் 29 பேர் உயிரிழந்திருந்தனர்.

மேலும், பரிசோதனைக் கருவிகளின் தவறால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்க நேர்ந்தது என்றும் அதிபர் கூறியிருந்தார்.


இதற்கிடையே, பிரிட்டனில் வழக்கத்தை விட கொரோனா பரவல் காலத்தில் 64 ஆயிரம் பேர் கூடுதலாக உயிரிழந்ததாக அந்நாட்டு தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. கொரோனா காலத்தில் நாட்டில் ஏற்பட்டுள்ள மொத்த உயிரிழப்புகள், கடந்த 5 ஆண்டுகளில் இதேகாலத்தில் நிகழ்ந்ததை விட அதிகம் என பிரிட்டன் தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், உலக நாடுகள் மக்கள் நல்வாழ்வு திட்டங்களுக்கான முதலீட்டை அதிகரிக்க வேண்டும் ஐக்கிய நாடுகள் அவை வலியுறுத்தியுள்ளது.

Also See: தமிழகம் முழுவதும் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்கள் எவை... எவை...? - மாவட்டம் வாரியாக முழு பட்டியல்

First published: June 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading