Home /News /international /

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் நாளை அடக்கம்.. லண்டன் சென்ற சர்வதேச தலைவர்கள்

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் நாளை அடக்கம்.. லண்டன் சென்ற சர்வதேச தலைவர்கள்

இங்கிலாந்து ராணி

இங்கிலாந்து ராணி

பொதுமக்களின் அஞ்சலிக்காக ராணி 2-ம் எலிசபெத்தின் உடல் லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • interna, IndiaLondon
    இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் நாளை அடக்கம் செய்யப்பட உள்ள நிலையில், அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உள்ளிட்ட சர்வதேச தலைவர்கள் லண்டன் சென்றுள்ளனர்.

    ராணி 2-ம் எலிசபெத்தின் மறைவு இங்கிலாந்து மட்டுமின்றி உலகம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களின் அஞ்சலிக்காக ராணி 2-ம் எலிசபெத்தின் உடல் லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பொதுமக்களின் வருகை அதிகரித்ததால் 24 மணி நேரம் வரை காத்திருந்து அஞ்சலி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

    ஒருபுறம் மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க, மறுபுறம் அஞ்சலி செலுத்துவதற்காக பல்வேறு ஊர்களில் இருந்து மக்கள் குவியத்தொடங்கினர். இதனால் 2,000-க்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனிடையே, ராணி 2ம் எலிசபெத்தின் உடலுக்கு அரசர் 3ம் சார்லஸ் இளவரசர்கள் ஆண்ட்ரு, எட்வர்ட் மற்றும் இளவரசி அனே உடன் 15 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தினார்.

     

    இறுதிச்சடங்கு நடைபெறும் திங்கட்கிழமை லண்டன் மற்றும் வின்சரில் விமானங்கள் பறக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 2,500 அடி உயரம் வரை ட்ரோன்கள் உட்பட அனைத்தும் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.இதன் பின்னர், வெஸ்ட் மினிஸ்டர் மண்டபத்தில் ராணியின் இறுதிச்சடங்கு நிகழ்வுகளை மேற்கொள்வது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் ராணியின் உடலை பாதுகாப்பாக எடுத்துச் செல்லும் வகையில் ஒத்திகை நிகழ்த்தப்பட்டது.

    Also Read: இரண்டாம் எலிசபெத் ராணி இறுதிச் சடங்கிற்கு அழைக்கப்படாத நாடுகளின் லிஸ்ட் இதோ!

    திங்கட்கிழமை நடைபெறவுள்ள ராணி 2-ம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கில் உலக தலைவர்கள் உட்பட 2,000-க்கும் மேற்பட்ட முக்கிய நபர்கள் கலந்துகொள்வார்கள் என்றும் 7,00,000 அதிகமான பொதுமக்கள் பங்கேற்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்காக இந்திய குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு லண்டன் சென்றுள்ளார். மேலும், பல்வேறு நாடுகளில் இருந்து முக்கிய தலைவர்கள் லண்டனை நோக்கி பயணம் மேற்கொண்டுள்ளனர்.

     

     
    Published by:Ramprasath H
    First published:

    அடுத்த செய்தி