ஹோம் /நியூஸ் /உலகம் /

ஆண் பிள்ளை பெறுவதற்காக தலையில் ஆணியை அறைந்த கர்ப்பிணி... நூலிழையில் உயிர் தப்பினார்

ஆண் பிள்ளை பெறுவதற்காக தலையில் ஆணியை அறைந்த கர்ப்பிணி... நூலிழையில் உயிர் தப்பினார்

தலையில் இருந்து 5 சென்டி மீட்டர் அதாவது 2 இன்ச் அளவுக்கு ஆணி உள்ளே இறங்கியிருந்தது.

தலையில் இருந்து 5 சென்டி மீட்டர் அதாவது 2 இன்ச் அளவுக்கு ஆணி உள்ளே இறங்கியிருந்தது.

தலையில் இருந்து 5 சென்டி மீட்டர் அதாவது 2 இன்ச் அளவுக்கு ஆணி உள்ளே இறங்கியிருந்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

ஆண் பிள்ளை பெற வேண்டும் என்பதற்காக தலையில் ஆணியை அறைந்த கர்ப்பிணி ஒருவர் நூலிழையில் உயிர் தப்பிய சம்பவம் பாகிஸ்தானில் நடந்துள்ளது.

பாகிஸ்தானின் பெஷாவர் நகரை சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கு மூட நம்பிக்கைகள் மீது அதிக நாட்டம் இருந்துள்ளது. கர்ப்பம் ஆன நிலையில் அவர் தனக்கு ஆண் பிள்ளை வேண்டும் என்கிற எதிர்பார்ப்பில் இருந்தார்.

இதையும் படிங்க - காதலர் தின வாரம் - சாக்லேட் டே கொண்டாடும் இளைஞர்கள்

ஏற்கனவே அவருக்கு 3 பெண் பிள்ளைகள் இருந்தன. இந்நிலையில், மந்திரவாதி ஒருவரை நாடிய அந்தப் பெண், தனக்கு ஆண்பிள்ளை வேண்டும் என்று கூறியுள்ளார். இதற்கு அவர் ஒரு பரிகாரம் சொல்ல, அதனை ஏற்றுக் கொண்ட பின்னர்தான் விபரீதம் ஏற்பட்டுள்ளது.

மந்திரவாதியின் ஆலோசனைப்படி கர்ப்பிணி தனது தலையில் ஆணி ஒன்றை அடித்துக் கொண்டார். இதனால் பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, அலறித் துடித்த கர்ப்பிணி பின்னர்மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதற்கிடையே, இடுக்கி போன்ற பொருளை வைத்து, ஆணியை அகற்ற அவர் முயற்சி செய்திருக்கிறார். ஆனால் பலன் ஏற்படவில்லை. பெஷாவர் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டபோது, நடந்த விபரங்களை அறிந்த மருத்துவர்கள் அதிர்ந்து போனார்கள்.

உடனடியாக கர்ப்பிணிக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. இதில் தலையில் இருந்து 5 சென்டி மீட்டர் அதாவது 2 இன்ச் அளவுக்கு ஆணி உள்ளே இறங்கியிருந்தது. இன்னும் கொஞ்சம் சென்றிருந்தால் மூளை பாதிக்கப்பட்டிருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். சிகிச்சை முடிந்ததும், கர்ப்பிணி வீடு திரும்பி விட்டார்.

இதையும் படிங்க - தனிமையில் இறந்த மூதாட்டி - இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு உடல் கண்டுபிடிப்பு!

இதற்கிடையே, இந்த சம்பவம் சுற்று வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து காவல்துறையினர் சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தினர். சிசிடிவி காட்சிகள் கைப்பற்றப்பட்டு, மந்திரவாதியையும், கர்ப்பிணியையும் கண்டுபிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Published by:Musthak
First published:

Tags: Pregnancy