ஹோம் /நியூஸ் /உலகம் /

10 வயது சிறுவனால் 13 வயது சிறுமி கர்ப்பம்... மருத்துவர்கள் ஷாக்!

10 வயது சிறுவனால் 13 வயது சிறுமி கர்ப்பம்... மருத்துவர்கள் ஷாக்!

கோப்புப் படம்

கோப்புப் படம்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  10 வயது சிறுவனால், தான் கர்ப்பமானதாக 13 வயது சிறுமி ஒருவர் தெரிவித்துள்ள சம்பவம் மருத்துவ உலகில் அதிர்ச்சியாக பார்க்கப்படுகிறது.

  ரஷ்யாவில் தாரியா என்ற 13 வயது சிறுமி திடீரென கர்ப்பமாகிறார். இதற்கு காரணம் யார் என்று கேட்டபோது தனது தோழனான 10 வயது சிறுவன் இவான் என்கிறார்.

  ரஷ்யாவில் ஒரு டிவி நிகழ்ச்சியில் இது தொடர்பாக அண்மையில் விவாதமே நடத்தப்பட்டது.

  குழந்தைத்தனம் மாறாமல் இருக்கும் இவான், நிச்சயமாக குழந்தைக்கு தந்தையாகும் தகுதிக்கு மாறியிருக்க முடியாது என்கின்றனர் மருத்துவர்கள்.

  இந்த செய்தியானது ரஷ்யாவில் வைரலாகிய நிலையில் தற்போது சமூக ஊடகங்களில் பேசுபொருளாகிவிட்டது.

  மருத்துவ ரீதியாக 10 வயது சிறுவனின் பிறப்புறுப்பு உடலுறவுக்கு தகுதி பெற்றிருக்க வாய்ப்பில்லை என்கின்றனர் மருத்துவர்கள். ஒரு வேளை டெஸ்ட் முடிவில் இவான்தான் அந்த சிறுமியின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு தந்தை என்றால், உலகிலேயே 10 வயது சிறுவன் தந்தையான முதல் நிகழ்வு இதுவாக தான் இருக்கும் என்கின்றனர்.

  கடந்த 2013 ஆம் ஆண்டு 35 வயதுகொண்ட ஆசிரியை 11 வயது சிறுவனுடன் தவறான உறவு வைத்துக்கொண்டதால் கர்ப்பமடைந்து குழந்தையை பெற்றெடுத்தார். இதுதான் இதுவரை மிக இளவயதில்  தந்தையான நிகழ்வாக பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

  Published by:Yuvaraj V
  First published: