ஜப்பானைப் புரட்டிப் போட்ட சூறாவளி! 26 பேர் பலி; ஒரு லட்சம் பேர் இடமாற்றம்

வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன. மீட்புக் குழுவினருடன் படகு மற்றும் ஹெலிகாப்டரும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

ஜப்பானைப் புரட்டிப் போட்ட சூறாவளி! 26 பேர் பலி; ஒரு லட்சம் பேர் இடமாற்றம்
ஜப்பான்
  • News18
  • Last Updated: October 13, 2019, 7:00 PM IST
  • Share this:
ஹகிபிஸ் சூறாவளியின் கோரத் தாண்டவத்தால் ஜப்பானின் பல்வேறு நகரங்களும் கடுமையாக சேதமடைந்துள்ளன. இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 26-ஆக உயர்ந்துள்ளது.

61 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக சக்தி வாய்ந்த சூறாவளியாக ஹகிபிஸ் ஜப்பானைத் தாக்கியுள்ளது. தலைநகர் டோக்கியோவில் மிகக் கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதுடன், பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதுடன், வெளியில் நிறுத்தப்பட்ட வாகனங்களும் பெருக்கெடுத்து ஓடும் மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டன.

ஜப்பானில் புகழ்பெற்ற புல்லட் ரயில்கள் மழைநீரால் உருவான சகதியில் சிக்கியுள்ளன. சுழன்றடித்த சூறாவளியால் இடி, மின்னலுடன் மழை கொட்டி வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. தலைநகர் டோக்கியோவில் 14 ஆயிரம் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. அத்துடன் 3 லட்சத்து 36 ஆயிரம் வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அவதியடைந்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன. மீட்புக் குழுவினருடன் படகு மற்றும் ஹெலிகாப்டரும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதுவரை 1 லட்சத்து 70 ஆயிரம் பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.


Also see:

First published: October 13, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்