முகப்பு /செய்தி /உலகம் / பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவு..

பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவு..

பிலிப்பைன்ஸ்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸ்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Philippines Earth Quake : பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • del, India

பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மத்திய பிலிப்பைன்ஸில் அதிகாலை 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மாஸ்பேட் மாகாணத்தின் முக்கிய தீவான மாஸ்பேட்டில், உசன் நகராட்சியில், அருகிலுள்ள மியாகா கிராமத்திலிருந்து 11 கிலோமீட்டர் (7 மைல்) தொலைவில் ஏற்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  சேதம் அல்லது உயிரிழப்பு பற்றிய உடனடி தகவல்கள் எதுவும் இல்லை.சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆகப் பதிவான நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியுள்ளது. இதன்காரணமாக மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர். 

பசிபிக் ரிங் ஆஃப் பயர்' என்று அழைக்கப்படும் நிலநடுக்க அச்சுறுதல் அதிகம் காணப்படும் பூகோள அமைப்பில் பிலிப்பைன்ஸ் நாடு உள்ளது. இங்கு எரிமலை வெடிப்பு, புயல், நிலநடுக்கம் போன்றவை பெருமளவில் நடைபெறுவதால் தீவிர பேரிடர் பாதிப்புகளுக்கு ஆளாக சர்வதேச நாடுகளில் ஒன்றாக பிலிப்பைன்ஸ் பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Earthquake, Philippines