அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 7.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

நில நடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

news18
Updated: July 6, 2019, 10:02 AM IST
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 7.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!
நில அதிர்வு ஏற்பட்ட இடங்கள்
news18
Updated: July 6, 2019, 10:02 AM IST
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இன்று காலை 7.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும், தொடர்ந்து நில அதிர்வு ஏற்பட்டு வருகிறது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இன்று காலை 7.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து, 5 முதல் 3 ரிக்டர் அளவில் தொடர்ச்சியாக நில அதிர்வு ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


நில நடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. கட்டிடங்கள் சேதமடைந்ததால் Ridgecrest பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக சி.என்.என் செய்தி வெளியிட்டுள்ளது. எனினும், இதுவரை உயிச்சேதம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

First published: July 6, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...