ஹோம் /நியூஸ் /உலகம் /

வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன்..

வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன்..

வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டம்

வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டம்

துணை அதிபர் கமலா ஹாரிஸ் அமெரிக்காவில் உள்ள  இந்திய வம்சாவளியினர் உடன் இணைந்து தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • inter, Indiaamericaamerica

  அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது வெள்ளை மாளிகையில், தீபாவளி பண்டிகையை கொண்டாடினார். அவர் உடன் துணை அதிபரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.

  தீபாவளி பண்டிகை இந்திய மக்கள் மட்டும் அல்லாது உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களால் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. இதில், அதிபர் ஜோ பைடன், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

  அப்போது பேசிய பைடன், அமெரிக்க கலாச்சாரத்தின் ஓர் அங்கமாக தீபாவளி கொண்டாட்டங்கள் திகழ்வதாக தெரிவித்தார். வெள்ளை மாளிகையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரும் அளவில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டுள்ளதாக பைடன் குறிப்பிட்டார். இதையொட்டி கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

  தீபாவளி கொண்டாடிய புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த அதிபர் பைடன், நம் ஒவ்வொருவருக்கும் இருளை அகற்றி உலகிற்கு வெளிச்சம் தரும் ஆற்றல் உள்ளது என்பதை நினைவூட்டுவது தீபாவளி என்றும் குறிப்பிட்டுள்ளார்.  துணை அதிபர் கமலா ஹாரிஸ் அமெரிக்காவில் உள்ள  இந்திய வம்சாவளியினர் உடன் இணைந்து தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்.

  தீபாவளியை ஒட்டி, ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரின் அடையாளமாக திகழும் ஓபரா ஹவுஸ், ஒளி வெள்ளத்தில் மிதந்தது. உலகின் மிகவும் பிரபலமான மற்றும் தனித்துவமான கட்டிடங்களில் ஒன்றான இங்கு, தீபாவளி கொண்டாட்டத்தை சிறப்பிக்கும் வகையில் மின்விளக்கொளி அரங்கேற்றப்பட்டது.

  இதையும் படிங்க: எம்.பி டூ பிரதமர் .... ரிஷி சுனக் கடந்து வந்த அரசியல் பாதை!

  பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் கைர்பூர் மாவட்டத்தில் உள்ள இந்து கோயிலில் தீபாவளி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், ஏராளமான இந்துக்கள் கலந்துகொண்டு தீபம் ஏற்றியும், பாடல் பாடியும் சாமி தரிசனம் செய்தனர். அத்துடன், அண்மையில் பெய்த கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன.

  Published by:Murugesh M
  First published:

  Tags: Deepavali, Diwali festival, Joe biden, Kamala Harris