மருத்துவரின் கவனக்குறைவால் முகமில்லாமல் பிறந்த குழந்தை...!

மருத்துவரின் கவனக்குறைவால் முகமில்லாமல் பிறந்த குழந்தை...!
மாதிரி படம்
  • News18
  • Last Updated: October 24, 2019, 8:42 PM IST
  • Share this:
மருத்துவரின் கவனக்குறைவு காரணமாக கண், மூக்கு, வாய் என்று முகத்தில் உள்ள உறுப்புகள் இல்லாமல் குழந்தை ஒன்று போர்ச்சுக்கல் நாட்டில் பிறந்துள்ளதை அடுத்து, அந்த மருத்துவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

போர்ச்சுகல் நாட்டின் செதுபால் (Setubal) என்ற நகரத்தில் உள்ள மருத்துவமனையில் கடந்த 7-ம் தேதி பெண் ஒருவருக்கு பிரசவமானது. குழந்தை பிறந்ததும் அதனை பார்த்த மருத்துவர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியே மிஞ்சியது. கண், மூக்கு, வாய் என்று முகத்தில் உள்ள உறுப்புகள் எதுவுமே அந்த குழந்தைக்கு இல்லை. மேலும், குழந்தையின் மண்டையோட்டின் ஒரு பகுதியே சரியாக வளர்ச்சி அடையவில்லை.

ரொட்ரிகோ என்ற அந்த ஆண் குழந்தை தற்போது மருத்துவமனையில் இருக்கும் நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. குழந்தையின் தாய்க்கு மூன்று முறை ஸ்கேன் சோதனை நடத்தியும் மகப்பேற்று மருத்துவர் டாக்டர் ஆர்ட்டர் கெர்வெல்ஹோ உறுப்பு வளர்ச்சி இல்லாததை கண்டறியவில்லை.


கர்ப்ப காலத்தின் ஆறாவது மாதத்தில் பெற்றோரின் வேண்டுகோளுக்கு இணங்க ஒருமுறை ஸ்கேன் எடுக்கப்பட்டது. அப்போது, குழந்தைக்குக் குறைபாடு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுப்பப்பட்டது. ஆனால், கவலைப்பட ஏதுமில்லை என்று மருத்துவர் கூறியதால் பெற்றோர் அதனை பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை.

இந்நிலையில், டாக்டர் கெர்வெல்ஹோ ஆறு மாதங்கள் மருத்துவ பணியாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர் மீது ஏற்கனவே 6 புகார்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

First published: October 24, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்