Home /News /international /

போர்ச்சுகல் சுற்றுலா சென்ற இந்திய கர்ப்பிணி பெண் உயிரிழப்பு: சுகாதாரத் துறை அமைச்சர் ராஜினாமா

போர்ச்சுகல் சுற்றுலா சென்ற இந்திய கர்ப்பிணி பெண் உயிரிழப்பு: சுகாதாரத் துறை அமைச்சர் ராஜினாமா

சுகாதாரத் துறை அமைச்சர்

சுகாதாரத் துறை அமைச்சர்

கடந்த 2018ம் ஆண்டு முதல் போர்ச்சுகீல் நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சராக  டாக்டர் மார்த்தா டெமிடோ (Dr Marta Temido) பணியாற்றி வருகிறார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • international, Indiaportugalportugalportugalportugalportugal
    மகப்பேறு மருத்துவமையில் போதிய மருத்துவர்கள் இல்லாத காரணத்தினால், இந்திய சுற்றுலா பெண்மணி உயிரிழந்த சம்பவத்திற்குப் பொறுப்பேற்று போர்ச்சுகீல் சுகாதாரத் துறை அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    கடந்த 2018ம் ஆண்டு முதல் போர்ச்சுகீல் நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சராக  டாக்டர் மார்த்தா டெமிடோ (Dr Marta Temido) பணியாற்றி வருகிறார். கொரோனா தொற்றை  சிறப்பாகக் கையாண்டதற்கு அதிகம் போற்றப்பட்டார். இருப்பினும், கொரோனா தொற்றுக்கு பிந்தைய காலங்களில் மருத்துவர்களின்  பற்றாக்குறை ஏற்பட்டது. குறிப்பாக,மகளிர் நிலவியல் மற்றும் மகப்பேறியல் துறைகளில் மனிதவளப் பற்றாக்குறை அதிகரித்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, அங்கு சில மகப்பேறு மருத்துவமனைகள் மூடப்பட்டு, சிகிச்சை நோயாளிகள் வேறொரு மருத்துவமனைக்கு மாற்றம்  செய்யப்பட்டு வருகின்றனர்.

    இதற்கு, அங்குள்ள எதிர்க்கட்சிகள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. மருத்துவர்கள் பற்றாக்குறையை போக்கும் வகையில், சிறந்த ஊக்கத்தொகை மற்றும் உள்கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    இதையும் வாசிக்க:  தமிழகத்தில் ஓராண்டில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட கருக்கலைப்புகள்: RTI தரவுகள் சொல்வதென்ன?

    இதற்கிடையே, 31வது வார கர்பத்தில் உள்ள இந்திய சுற்றுலா பெண்மணிக்கு திடீரென்று மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதாகவும், இதனையடுத்து  அந்நாட்டின் பெரிய மருத்துவமனையாக பார்க்கப்படும் Lisbon's Santa Maria Hospital என்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அங்கு, அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. பின்பு, அங்குள்ள மகப்பேறு பிரிவில் இடமில்லாததால், கர்ப்பிணி பெண் அருகிலுள்ள Sao Francisco Xavier hospital மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறார். ஆனால், பயணத்தின் இடையே  மாரடைப்பு காரணமாக கர்ப்பிணிப் பெண் உயிரிழந்த  துயர சம்பவம் நடைபெற்றுள்ளது.  

    இருப்பினும், அவசர அறுவை சிகிச்சை மூலம்  உயிரிழந்த பெண்ணின் குழந்தையை மருத்துவர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர். இந்த துயர சம்பவத்திற்கு பொறுப்பேற்கும் விதமாக அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைசச்சர்  மார்த்தா டெமிடோ ராஜினாமா செய்துள்ளார்.

     

     
    Published by:Salanraj R
    First published:

    Tags: Pregnancy

    அடுத்த செய்தி