ஹோம் /நியூஸ் /உலகம் /

சண்டேதான் கூட்டமே.. 2022ல் ஆபாச படங்களை பார்த்துதள்ளிய நாடுகள்! இந்தியா லிஸ்ட்ல இருக்கா?

சண்டேதான் கூட்டமே.. 2022ல் ஆபாச படங்களை பார்த்துதள்ளிய நாடுகள்! இந்தியா லிஸ்ட்ல இருக்கா?

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் Pornhub உள்ளிட்ட ஆபாச தளங்களுக்கு அரசு தடை விதித்தது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • inter, IndiaSan FranciscoSan Francisco

உலக அளவில் முன்னணி ஆபாச இணையதளங்களில் ஒன்றாக இருப்பது PornHub. இந்த இணையதளம் ஆண்டுதோறும் தனது பார்வையாளர்களின் தேடல், ரசனை ஆகியவற்றை தொகுத்து "Year in Review” என்ற ஆய்வு பட்டியலை வெளியிடுவதை வழக்கமாக உள்ளது.

சர்வதேச அளவில், அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் அதிகளவு மக்கள் ஆபாச படங்கள் பார்ப்பதில் தங்கள் நேரத்தை செலவிடுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் Pornhub உள்ளிட்ட ஆபாச தளங்களுக்கு அரசு தடை விதித்தது. அதனால் இந்த லிஸ்டில் இந்தியா இல்லை. ஆனாலும் புதிய புதிய URL மற்றும் Proxy தளங்கள் மூலம் ஆபாச இணையதளங்களை இந்தியர்கள் பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் PornHub தளம் 2022ல் இளைஞர்கள் அதிகம் தேடியது எவ்வகை ஆபாச வீடியோக்கள் என்ற பட்டியலை பிரபல ஆபாச இணையதளமான பார்ன் ஹப் (pornhub) வெளியிட்டுள்ளது. 2022ம் ஆண்டுக்கான "Year in Review” தரவுகளின்படி,உள்நாட்டு சிக்கல், விலைவாசி உயர்வு, அரசியல் கொதிநிலை போன்ற சிக்கல்களுக்கு மத்தியிலும் அமெரிக்கார்கள் தான் இந்த இணையதளத்தின் டாப் பார்வையாளர்களாக உள்ளனர். அதற்கு அடுத்து இரண்டாவது இடத்தில் பிரிட்டனும், மூன்றாவது இடத்தில் பிரான்சும் உள்ளது. ஜப்பான் 4ஆவது இடத்திலும், மெக்சிகோ 5ஆவது இடத்திலும் உள்ளது.மேலும், அமெரிக்காவில் 86 சதவீதம் மக்கள் தங்கள் போன்கள் மூலம் pornhub வீடியோக்களை பார்த்துள்ளனர்.

ஞாயிறுக்கிழமை தான் மக்கள் அதிக நேரம் இந்த இணையதளத்தில் செலவிடுவதாக கூறும் தரவுகள், இந்த இணையதளத்தில் மக்கள் தேடும் ரசனை என்பது வெகுஜன கலாசாரம் மற்றும் சர்வதேச அளவில் மக்கள் மனநிலையில் உருவாகியுள்ள மாற்றங்களின் பிரதிபலிப்பாக உள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது. ஜனவரி 1, புத்தாண்டு நாளில் தான் மிகக்குறைவான பேர் இந்த இணையதளத்திற்கு வருகை தருவதாக புள்ளி விவரம் கூறுகிறது. கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி பார்வையாளர்கள் எண்ணிக்கை 24% குறைந்து காணப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: குழந்தை பெற்றுக்கொண்டால் ரூ.3 லட்சம் மானியம்.. சூப்பர் சலுகை அறிவித்த ஜப்பான்!

நாடுகள் வாரியாக பட்டியலில் 7 இடங்கள் முன்னேறி எகிப்து டாப் 20 பட்டியலில் முதல்முறையாக இடம்பிடித்துள்ளது. டாப் 20 பட்டியலில் ஆப்ரிக்க நாடு இடம்பிடித்துள்ளது இதுவே முதல்முறை. ஆபாச வீடியோ பார்ப்பவர்களின் சராசரி வயது கடந்தாண்டை போலவே இந்தாண்டும் 37 ஆக உள்ளது. 18-24 வயதுக்குட்பட்டவர்கள் ஆபாச படம் பார்க்கும் எண்ணிக்கை 2 சதவீதம் உயர்ந்துள்ளது. எனினும், 35-44 வயதுக்குட்பட்டவர்களிடையே இந்த எண்ணிக்கை 2 சதவீதம் குறைந்துள்ளது.

First published:

Tags: Porn websites