யுனெஸ்கோவால் புராதன இடமாக அறிவிக்கப்பட்ட இடத்தில் ஆபாசப்பட ஷூட்டிங்...!

 • News18
 • Last Updated :
 • Share this:
  யுனெஸ்கோவால் புராதன சின்னமாக அறிவிக்கப்பட்ட இடத்தில் ஆபாசப்படம் வீடியோவாக எடுக்கப்பட்ட சம்பவம் மியான்மரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  இந்தியாவின் அண்டை நாடான மியான்மரில் உள்ள பாகன் என்ற பகுதி யுனெஸ்கோவால் புராதன சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. புத்த மத்தினரின் புனித தலமாகவும் பாகன் உள்ளது.

  இந்த நிலையில், ஆபாச இணையதளம் ஒன்றில், இப்பகுதியில் எடுக்கப்பட்ட ஆபாசப் படம் இருந்துள்ளது அந்நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் உள்ள தகவல்களின் படி அவர்கள் இருவரும் இத்தாலியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.

  டெய்லி மெயில் வெளியிட்டுள்ள செய்தியின் படி, 23 வயதுக்கு உள்பட்ட இருவரும் பாகனில் உள்ள புகழ்பெற்ற கோட்டைப் பகுதியில் 12 நிமிட உடலுறவுக்காட்சியை வீடியோவாக பதிவு செய்து, ஆபாச தளத்தில் பதிவு செய்துள்ளனர்.

  இந்த வீடியோவை சுமார் 2.5 லட்சம் பேர் இதுவரை பார்த்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மியான்மரைச் சேர்ந்தவர்கள் இந்த வீடியோவின் கீழே, “புனித இடத்தில் வந்து இந்த வேலையைச் செய்துள்ளீர்கள்” என்று கோபமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

  பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக இப்படி நடந்திருக்கலாம் என்று சுற்றுலா பிரிவு அதிகாரி கூறியுள்ளார். கொரோனா வைரஸ் பீதியால், பல சுற்றுலா தளங்கள் ஆளரவமற்று இருப்பதால், இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளதாகவும் அவர் கூறுகிறார்.
  Published by:Sankar
  First published: