2050-ல் மக்கள் தொகை 9.7 பில்லியன் ஆக உயரும்- ஐ.நாவின் ஆய்வறிக்கை

சீனாவின் மக்கள் தொகை 2050-ம் ஆண்டுக்குள் 2.2 சதவிகிதம் வீழும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Web Desk | news18
Updated: June 18, 2019, 4:24 PM IST
2050-ல் மக்கள் தொகை 9.7 பில்லியன் ஆக உயரும்- ஐ.நாவின் ஆய்வறிக்கை
மாதிரிப்படம்
Web Desk | news18
Updated: June 18, 2019, 4:24 PM IST
uniருகிற 2050-ம் ஆண்டில் உலகின் மக்கள் தொகை 9.7 பில்லியன் ஆக உயரும் என ஐநா அறிக்கை வெளியிட்டுள்ளது.

உலகின் இன்றைய மக்கள் தொகை 7.7 பில்லியன் ஆக உள்ளது. வரும் 2050-ம் ஆண்டில் இது 9.7 பில்லியன் ஆக உயரும் என ஐநா அறிக்கை கூறுகிறது. ஐநா-வின் பொருளாதாரம் மற்றும் சமூக விவகாரங்கள் துறை ‘உலக மக்கள் தொகை வாய்ப்புகள்’ என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது.

வாழ்வின் ஆயுட்காலம், கருவுறுதல் விகிதம் ஆகியவற்றையும் ஆய்வுக்கு உட்படுத்தி இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. வருகிற 2050-ம் ஆண்டில் இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், காங்கோ, எத்தியோப்பியா, தான்சானியா, இந்தோனேஷியா, எகிப்து மற்றும் அமெரிக்கா ஆகிய ஒன்பது நாடுகளில் மக்கள் தொகை அடர்த்தியாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.


அதேநேரம், சீனாவின் மக்கள் தொகை 2050-ம் ஆண்டுக்குள் 2.2 சதவிகிதம் வீழும் என்றும் கூறப்பட்டுள்ளது. கருவுறுதல் வீழ்ச்சியால் உலகின் 27 நாடுகளில் மக்கள் தொகை 2010-ம் ஆண்டு முதல் 1 சதவிகித வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது.

மேலும் பார்க்க: மக்களவையின் காங்கிரஸ் தலைவராக அதிர் ரஞ்சன் சவுத்ரி தேர்வு
First published: June 18, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...