ஹோம் /நியூஸ் /உலகம் /

'ஆபாசப் படத்தில் சாத்தான் இருக்கு.. டெலிட் பண்ணுங்க'.. டிஜிட்டல் உலகம் குறித்து பேசிய போப் பிரான்சிஸ்!

'ஆபாசப் படத்தில் சாத்தான் இருக்கு.. டெலிட் பண்ணுங்க'.. டிஜிட்டல் உலகம் குறித்து பேசிய போப் பிரான்சிஸ்!

போப் பிரான்சிஸ்

போப் பிரான்சிஸ்

சமூக வலைத்தளத்தின் பயன்பாட்டை குறித்து நடத்தப்பட்ட கலந்துரையாடலில் பேடிய போப் பிரான்சிஸ் ஆபாசப்படங்கள் குறித்து பேசியுள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • intern, IndiaVaticanVatican

  இணையத்தில் ஆபாசப் படங்களைப் பார்ப்பதைப் பற்றி போப் பிரான்சிஸ் பேசும் போது கன்னியாஸ்திரீகள், போதர்கள் கூட ஆபாசப்படம் பார்க்கிறார்கள். அது தீமையை விளைவிக்கும் என்று கூறியுள்ளார்.

  வாட்டிகன் நகரில் போப் பிரான்சிஸ் உடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் டிஜிட்டல் மற்றும் சமுக வலைத்தளத்தை எப்படி நல்ல விதத்தில் உபயோகிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய அவர், இணையத்தில் வரும் ஆபாசப்படங்கள் தீமையை விளைவிக்கிறது. மேலும் அதன் மூலம் ஏற்படும் அபாயத்தைப் பற்றி எச்சரித்துள்ளார்.

  அதற்கு கன்னியாஸ்திரீகள், போதர்கள் போன்றவர்கள் கூட தப்பிக்க முடிய வில்லை. சாத்தான் அதிலிருந்து வருகிறது. மனத்திற்குள்ளே செல்கிறது. போதகர்களின் இதயத்தை நலினப்படுத்துக்கிறது என்று கூறினார். கடந்த வருடங்களாக போப் பிரான்சிஸ் தொடர்ந்து ஆபாசப்படங்களினால் ஏற்படும் தீமையைப் பற்றிப் பேசிக்கொண்டு வருகிறார்.

  Also Read : இனி கஞ்சாவை உபயோக்கிக்காலம்... சட்டப்படி அனுமதி வழங்கும் ஜெர்மனி!

  தொடர்ந்து, டிஜிட்டல் மற்றும் சமூக வலைத்தளங்களை நல்ல முறையில் உபயோகிக்க வேண்டும், அதில் அதிக நேரம் செலுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறினார். மேலும் தூண்டுதல்கள் ஏற்படுத்தாத வகையில் ஆபாசப்படங்களை போனில் இருந்து நீக்கி விடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

  Published by:Janvi
  First published:

  Tags: Pope Francis, Porn websites, Vatican