முகப்பு /செய்தி /உலகம் / கத்தோலிக்க பாரம்பரியத்தை தகர்த்த போப் பிரான்சிஸ்: முதல் முறையாக உயர் பதவியில் பெண் நியமனம்!

கத்தோலிக்க பாரம்பரியத்தை தகர்த்த போப் பிரான்சிஸ்: முதல் முறையாக உயர் பதவியில் பெண் நியமனம்!

போப் பிரான்சிஸ்

போப் பிரான்சிஸ்

இதுவரை பெண்கள் யாரும் இப்பொறுப்பில் நியமிக்கப்படாத நிலையில் வாடிகன் வரலாற்றில் முதல் முறையாக இது அமைந்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

கத்தோலிக்க பாரம்பரியத்தை தகர்த்தெறிந்து, பெண் ஒருவரை ஆயர்களின் சினோடின் துணை செயலாளராக நியமித்துள்ளார் போப் பிரான்ஸிஸ். இந்த பதவியை வகிக்கும் முதல் பெண் மற்றும் வாக்களிக்கும் உரிமை பெற்ற முதல் பெண்மணியாகவும் அப்பெண் மாறியிருக்கிறார்.

தற்போது கார்டினல் மரியோ கிரேச் தலைமையில், செயல்பட்டு வரும் Synod of Bishops அமைப்பானது 1965 ஆம் ஆண்டில் போப் 6ம் பால்-ஆல் நிறுவப்பட்ட ஒரு நிரந்தர நிறுவனமாகும், இது இரண்டாம் வாடிகன் சபையின் ஆயர்களின் விருப்பத்திற்கு இணங்க உருவாக்கப்பட்டது. இது போப்பின் செயல்பாடுகளில் அவருக்கு உதவவும், ஆலோசணைகள் அளிப்பதிலும் உதவுகிறது.

இந்நிலையில் இவ்வமைப்பின் துணை செயலாளர்களாக Nathalie Becquart எனும் பெண்ணையும், Luis Marin என்பவரையும் போப் பிரான்ஸிஸ் நியமித்துள்ளார். இதுவரை பெண்கள் யாரும் இப்பொறுப்பில் நியமிக்கப்படாத நிலையில் வாடிகன் வரலாற்றில் முதல் முறையாக இது அமைந்துள்ளது.

இவ்வமைப்பின் தலைமைக்கு இதுவரை பெண் உறுப்பினர்களே இடம்பெறாத நிலையில் முதல் முறையாக Nathalie Becquart (வயது 52) நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இது தொடர்பாக இச்சபையின் பொதுச்செயலாளர் Cardinal Mario Grech கூறுகையில், சமீப காலமாக சபையில் பெண்களின் வருகை அதிகரித்துள்ளது. பெண்களுக்கு பிரநிதித்துவம் அளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார். மேலும் Nathalie-க்கு வாக்களிக்கும் உரிமையும் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

சகோதரி நத்தலி பெகார்ட் நியமனம் மற்றும் வாக்களிப்பில் பங்கேற்பதற்கான வாய்ப்புடன், ஒரு புதிய கதவு திறக்கப்பட்டுள்ளது என்று Cardinal Mario Grech தெரிவித்தார்.

ஆயர்கள் மற்றும் கார்டினல்கள் ஆகியோரால் இந்த Synod of Bishops வழிநடத்தப்படுகிறது, மேலும் வாக்களிக்க முடியாத நிபுணர்களையும் இது உள்ளடக்கியது, இதன் அடுத்த கூட்டம் 2022 இலையுதிர்காலத்தில் திட்டமிடப்பட்டுள்ளது

First published:

Tags: Pope Francis, Vatican