முகப்பு /செய்தி /உலகம் / "கூலிப்படை வைத்து கொல்வதற்கு ஒப்பானது கருக்கலைப்பு": போப் பிரான்சிஸ்

"கூலிப்படை வைத்து கொல்வதற்கு ஒப்பானது கருக்கலைப்பு": போப் பிரான்சிஸ்

போப் பிரான்சிஸ்

போப் பிரான்சிஸ்

கருக்கலைப்பு செய்வது கூலிப்படையை வைத்து கொலை செய்வது போன்றது என போப் பிரான்சிஸ் சாடியுள்ளார்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

கருக்கலைப்பு செய்வது கூலிப்படையை வைத்து கொலை செய்வதற்கு ஒப்பானது என போப் பிரான்சிஸ் சாடியுள்ளார்.

இத்தாலி நாட்டில் உள்ள வாட்டிகன் அரண்மனையில் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமை மதகுருவான போப் பிரான்சிஸ் இன்று மக்களை சந்தித்தார். அப்போது அங்குள்ள செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் பிரார்த்தனை நடத்தப்பட்டது. பிராத்தனைக்கு முன்பு போப் பிரான்ஸிஸ் அங்கு திரண்டிருந்த அவரது பக்தர்கள் முன்னிலையில் உரை நிகழ்த்தினார்.

அந்த உரையில் மனித உயிர்களை அழிப்பதன் மூலம் எந்த பிரச்சனைக்கும் தீர்வு கண்டு விட முடியாது என்றார். மேலும் சின்னஞ்சிறிய உயிரை கருவிலேயே அழிப்பது என்பது, கூலிப்படையை வைத்து கொலை செய்வதற்கு ஒப்பானது என்றார். மேலும் ஒரு பிரச்சனையை தீர்ப்பதற்காக கூலிப்படையைத் தான் நாட வேண்டுமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும் இந்த ஆண்டு அர்ஜென்டினாவில் கருக்கலைப்பு சட்டப்பூர்வமாக்கப்படும் என்று ஒரு மசோதா சமர்ப்பிக்கப்பட்டது அதற்கு போப் பிரான்சிஸ் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். இவருக்கு ஆதரவாக கடந்த ஆகஸ்ட் மாதம் ஆயிரக்கணக்கான அர்ஜென்டினா கத்தோலிக்கர்கள் கருகலைப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தேவாலயத்தில் உள்ள அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகிக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ...

பாதிரியார்களின் பாலியல் சீண்டல்கள் வெட்கக்கேடானவை - போப் பிரான்சிஸ் வேதனை

First published:

Tags: Abortion, Hiring a hit man, Pope Francis, Vatican