பணம், அதிகாரம் மற்றும் இன்பத்திற்காக உலகம் ஏங்கி கொண்டிருப்பதாக போப் ஆண்டவர் பிரான்சிஸ் வருத்தப்பட்டுள்ளார்.
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வாடிகன் நகரில் செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிராத்தனையில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் ,முழங்கால் வலியால் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி வந்தார். இந்த சிறப்பு பிராத்தனையில் தேவாலயத்துக்குள் 7 ஆயிரம் பேரும், தேவாலயத்துக்கு வெளியே 4 ஆயிரம் பேர் திரண்டிருந்தனர்.
இதன் பிறகு பேசிய போப் ஆண்டவர் பிரான்சிஸ், ’’செல்வம் மற்றும் அதிகாரத்திற்கான பசியில் தங்கள் அண்டை வீட்டாரையும் தங்கள் சகோதர-சகோதரிகளையும் கூட சுரண்ட பார்க்கின்றனர் என்றார். போரால் பல இடங்களில் மனித கண்ணியமும், சுதந்திரமும் இழிவாக நடத்தப்படுகின்றன.
மனித பேராசையால் பலவீனமானவர்கள் மற்றும் பாதிக்கக்கூடிய சூழலில் உள்ளவர்தான் அதிகம் பாதிக்கபடுவதல் அவர்களை நினைத்து கவலை கொள்கிறேன் என பேசினார். பணம், அதிகாரம் மற்றும் இன்பத்திற்காக ஏங்கி கொண்டிருக்கும் உலகத்தில் போரினால் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகள் தான் என பேசினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Christmas, Pope Francis, Vatican