வரலாற்றுச் சிறப்புமிக்க போப் ஆண்டவர் - கிராண்ட் இமாம் சந்திப்பு!

அபுதாபியில் நடந்த இந்த சகோதரத்துவ நிகழ்வில் உலக கத்தோலிக்க மதத் தலைவரான போப் பிரான்ஸிஸும் சன்னி இஸ்லாத்தின் தலைவர் ஷேக் அஹமத் அல்-தேப் ஆகிய இருவரும் தலைமை ஏற்றனர்.

வரலாற்றுச் சிறப்புமிக்க போப் ஆண்டவர் - கிராண்ட் இமாம் சந்திப்பு!
போப் ஆண்டவர்- கிராண்ட் இமாம் (REUTERS/Tony Gentile)
  • News18
  • Last Updated: February 5, 2019, 11:16 AM IST
  • Share this:
ஐக்கிய அரபு எமிரேகத்துடனான சகோதரத்துவ புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் போப் ஆண்டவரும் கிராண்ட் இமாமும் வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பில் கையெழுத்திட்டனர்.

கிறிஸ்துவம், இஸ்லாம், யூதம் மற்றும் பல மத நல்லிணக்கத் தலைவர்கள் முன்னிலையில் அபுதாபியில் போப் ஆண்டவரும் கிராண்ட் இமாம் அல்-அசாரும் வரலாற்றுச் சிறப்புமிக்க சகோதரத்துவ புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

நாடு, மதம், இனம் கடந்து ஒற்றுமையும் அமைதியும் நிலவ வேண்டி இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.


அபுதாபியில் நடந்த இந்த சகோதரத்துவ நிகழ்வில் உலக கத்தோலிக்க மதத் தலைவரான போப் பிரான்ஸிஸும் சன்னி இஸ்லாத்தின் தலைவர் ஷேக் அஹமத் அல்-தேப் ஆகிய இருவரும் தலைமை ஏற்றனர்.அல்-அசார் மற்றும் வாடிகன் இணைந்து இனி தீவிரவாதத்துக்கு எதிராகவும் உலக அமைதிக்கு ஆதரவாகவும் போராடும் என அறிவித்துள்ளனர்.

மத்திய கிழக்கு நாடுகள், ஏமன், சிரியா, லிபியா மற்றும் ஈராக்கில் நடைபெற்று வரும் போர்கள் நிறுத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார் போப் ஆண்டவர்.

ஷேக் தாயெப் பேசுகையில், ‘ஒரு சில குற்றவாளிகளால் காலம் காலமாக ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகமும் அவதிப்பட்டது போது. அத்தனை மதத்திலும் படுகொலைகளை கடவுள் ஒரு நாளும் விரும்பமாட்டார் என்றே கூறப்பட்டுள்ளது’ என்றுப் பேசினார்.

மேலும் பார்க்க: பாக்ஸ் ஆபீஸ்: முதலிடத்தைப் பிடித்த வந்தா ராஜாவாதான் வருவேன்
First published: February 5, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்