முகப்பு /செய்தி /உலகம் / ஹாலோவீன் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பிரபல இளம் பாடகர்! ரசிகர்கள் இரங்கல்!

ஹாலோவீன் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பிரபல இளம் பாடகர்! ரசிகர்கள் இரங்கல்!

லீ

லீ

ஹாலோவீன் கூட்ட நெரிசலில் சிக்கி பிரபல இளம் பாடகர் உயிரிழந்தார்

  • Last Updated :
  • Tamil Nadu, India

இறந்தவர்களை நினைவுகூரும் வகையில், தென்கொரிய தலைநகர் சியோலில் நடைபெற்ற ஹாலோவீன் விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 154-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதில் பிரபல கொரியன் பாப் சிங்கர் லீ ஜிகானும் ஒருவர்.

24 வயதான இளம் பாப் பாடகரான பாடகராகவும்,நடிகராகவு இருந்து வந்தார். Produce 101 என்ற பாட்டுப்போட்டிக்கான ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று தன் திறமையை ஊருக்குக் காட்டினார் லீ. அதன்பின்னர் ஆல்பம், நடிப்பு என பிசியானார். இந்நிலையில் ஹாலோவின் கூட்ட நெரிசலுக்கு லீ உயிரை விட்டுள்ளார். அவரது மறைவுக்கு அவரது ரசிகர்கள் ஆழ்ந்த மன வருத்தத்தையும் குறிப்பிட்டு வருகின்றனர்.

Read More : சோமாலியாவில் சக்தி வாய்ந்த இரட்டை கார் குண்டுவெடிப்பு- ஊடகவியலாளர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் பலி!

தென்கொரியாவில் ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 31ஆம் தேதி ஹாலோவீன் எனும் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. புனிதர்கள், தியாகிகள், குடும்பத்தினர்கள், நண்பர்கள் என இறந்தவர்களை நினைவுகூரும் வகையில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சி்யோலின் இடோவான் என்ற இடத்தில் பிரபல சந்தைப் பகுதியில் நடைபெற்ற விழாவில், சுமார் ஒரு லட்சம் பேர் கூடியிருந்தனர்.

விழா நடந்த இடம் வெறும் 13 அடி அகலமே கொண்ட சிறிய பகுதி என்பதால், கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில், பொதுமக்கள் ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டே நடந்து சென்றனர். ஒருகட்டத்தில் கூட்ட நெரிசல் எல்லை மீறியதால், பலருக்கு மூச்சுத்திணறல் மற்றும் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தனர்.

top videos
    First published:

    Tags: South Korea