பொதுவாகவே சுற்றுச்சூழல் மாசுபாடு பற்றி பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாதவரை, பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. வாகனங்களால் ஏற்படும் காற்று மாசுபாடு, தொழிற்சாலைகள் வெளியேற்றும் ரசாயனத்தால் நிலத்தில் பாதிப்புகள் என்பதைத் தவிர்த்து மின்னணு கழிவு பொருட்களாலும் சுற்றுசூழல் பாதிக்கப்படுகிறது. பூச்சி மருந்துகள், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் எலெக்ட்ரானிக் கழிவுகள் ஆகிய மூன்றுமே மனித உரிமைகளை மீறுவதாக காணப்படுகிறது. அது மட்டுமின்றி இவற்றால் கிட்டத்தட்ட 90,00,000 இறப்புகள் ஏற்பட்டுள்ளன என்பது அதிர்ச்சியூட்டுவதாக இருக்கிறது.
இரு ஆண்டுகளுக்கு முன் உலகையே ஆட்டிப்படைக்கும் என்று கனவில் கூட எதிர்பார்க்காத கோவிட் தொற்று, உலகத்தை முடக்கியதோடு மட்டுமல்லாமல் கிட்டத்தட்ட 60,00,000 நபர்கள் இறப்புக்கு காரணமாக இருக்கிறது என்று Worldometer தரவு கூறுகிறது.
ஐக்கிய நாடு சிறப்பு அறிக்கையாளரான டேவிட் பியாய்ட், “தற்போதைய மாசுபாடு மற்றும் நச்சுப் பொருட்களின் பாதிப்பை தடுக்கும் முயற்சிகள் தோல்வி அடைந்து வருகின்றன. இதனால் சுத்தமான, ஆரோக்கியமான மற்றும் நீண்ட காலம் வாழக்கூடிய சூழல் பாதிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
ஐக்கிய சபை மனித உரிமை கவுன்சிலுக்கு இந்த அறிக்கையை அடுத்த மாதம் சமர்ப்பிக்க வேண்டும் என்ற நிலையில், தூய்மையான சுற்றுசூழல் என்பது மனிதர்களின் உரிமை என்று கவுன்சிலின் வலைதளத்தில் கடந்த செவ்வாய் அன்று பதிவு செய்யப்பட்டது.
வீடுகளில் பயன்படுத்தப்படும் நான்ஸ்டிக் சமையல் பாத்திரங்களில் மனிதர்களால் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு சில ரசாயனங்கள் (Polufluoroalkul & perufluoroalkyl) சேர்க்கப்பட்டுள்ளது. இந்த ரசாயனங்களால் கேன்சல் உருவாகும் ஆபத்து இருக்கின்றது. அதுமட்டுமின்றி இவை ‘forever chemicals’ என்று குறிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த ரசாயனங்களின் நச்சுத்தன்மை எப்போதுமே மாறாது, இதனால் ஆபத்து நீடித்திருக்கும்.
Also read... விளையாட்டு நிகழ்வுகளில் ஹிஜாப்களை தடை செய்யும் மசோதா - பிரான்ஸின் தேசிய சபைக்கு மாற்றம்!
சுற்றுசூழல் பாதிப்பால் மிகவும் அதிகமாக மாசடைந்த இடங்களை ‘நியூக்ளியர் டெஸ்ட் சோன்’ என்று சில காலங்களுக்கு முன் வரை அழைக்கப்பட்டது. இத்தகைய இடங்கள், பருவ நிலை மாற்றம் காரணமாக வாழ முடியாத இடம் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. தற்போது இந்த இடங்களை ‘சாக்ரிபைஸ் சோன்’ என்று பெயர் மாற்றியுள்ளனர். வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் மக்கள், மார்ஜினல் சமூகங்கள் மற்றும் பழங்குடி மக்கள் வாழும், அதிகமாக பாதிப்பு அடைந்த மற்றும் மாசுபாட்டால் வாழ முடியாத சூழல் இருந்தாலும் வேறு வழியின்றி வாழ்ந்து வரும் சமூகங்கள் வசிக்கும் இடங்களை சுத்தம் செய்வதற்கு அதிக முன்னுரிமையும் முக்கியத்துவமும் அளிக்கப்படும்.
ஐக்கிய சபை உரிமைகளின் தலைவரான மிச்செல் பச்லெட், இந்த சுற்றுச் சூழல் ஆபத்துகள் உலகம் முழுவதிலுமே மனித குலத்துக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. அது மட்டுமின்றி அதிகரித்து வரும் பருவநிலை மாற்றங்களும் மனிதர்களுக்கு அடிப்படை தேவைகளை மற்றும் உரிமைகளை கூட பாதித்து விடும் அபாயத்தை ஏற்படுத்தி வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Air pollution, UN