இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தலில் அமைதியான வாக்குப்பதிவு

இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தலில் அமைதியான வாக்குப்பதிவு
(Reuters)
  • Share this:
225 இடங்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில், 196 இடங்களுக்கான உறுப்பினர்களை மக்கள் தேர்ந்தெடுக்க உள்ளனர். இந்த தேர்தலில் ராஜபக்ச சகோதரர்களின் பொதுஜன பெரமுன கட்சி, ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து பிரிந்து சென்ற சஜித் பிரேமதசாவின் ஐக்கிய மக்கள் தேசிய கட்சி, மைத்ரிபாலாவின் சுதந்திர கட்சி என நான்கு கட்சிகள் களம் காண்கின்றன.

போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், கொரோனா அச்சமின்றி மக்கள் விதிகளை பின்பற்றி வாக்களிக்கலாம் என்றும் இலங்கை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Also read... பேஸ்புக் மூலம் சிறுமிக்கு காதல் வலை - ஊரடங்கில் கடத்திச் சென்று லாட்ஜில் தங்கியிருந்த இளைஞர் கைது


இன்று பதிவாகும் வாக்குகள், நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற இருந்த தேர்தல் கொரோனா காரணமாக தற்போது நடைபெறுகிறது.இலங்கையில் முதல்முறையாக சர்வதேச கண்காணிப்பில் இல்லாமல் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
First published: August 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading