கருப்பினத்தவர் கொலை செய்யப்பட்ட விவகாரம்: வெள்ளை மாளிகை முன்பாக வெடித்த போராட்டம்

அமெரிக்காவில் காவல்துறை அதிகாரியால் கருப்பினத்தவர் கொல்லப்பட்டதை கண்டித்து 2வது நாளாக தீவிரப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

கருப்பினத்தவர் கொலை செய்யப்பட்ட விவகாரம்: வெள்ளை மாளிகை முன்பாக வெடித்த போராட்டம்
REUTERS
  • Share this:
அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தில் உள்ள மின்னபொலிஸ் நகரில் கருப்பின இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். அப்போது அவரை சாலையில் கிடத்திய போலீஸ் ஒருவர், கழுத்தில் முட்டியை வைத்து அழுத்தி தாக்குதல் நடத்தினார். இதனால், அந்த கருப்பின இளைஞர் உயிரிழந்தார்.

இதை கண்டித்து அமெரிக்காவின் பல பகுதிகளில் கருப்பின மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு சில இடங்களில் காவல்துறை வாகனங்கள் மற்றும் பொதுச் சொத்துகளுக்கு தீவைத்து வன்முறையும் அரங்கேறி வருகின்றன.

இதனால் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்த போலீசார், ஒரு சிலரை கைது செய்தனர். இதனிடையே வெள்ளை மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட கருப்பின மக்கள், அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். இதையடுத்து, அந்த பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


Also see...

உலகளவில் 61 லட்சத்தைக் கடந்தது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை

போலீசாரால் கொல்லப்பட்ட கருப்பின இளைஞர் - அமெரிக்காவில் பல இடங்களில் போராட்டம்
First published: May 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading