மின்னசோட்டா மாகாணத்தில் கடந்த மாதம் 25 ஆம் தேதியன்று ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்னும் கறுப்பின இளைஞர் போலீசாரால் கொல்லப்பட்ட நிலையில், இனப்பாகுபாட்டிற்கு எதிராக அமெரிக்காவில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு ஜார்ஜியா மாகாணத்தின் அட்லாண்டா நகரில் காருக்குள் தூங்கிக் கொண்டிருந்த ரேஷார்ட் ப்ரூக்ஸ் (Rayshard Brooks) என்பவரை போலீசார் விசாரணைக்கு அழைத்த போது ஏற்பட்ட மோதலில் ப்ரூக்ஸை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
இந்தச் சம்பவத்துக்கு பொறுப்பேற்று அட்லாண்டா மாகாண தலைமை காவல் அதிகாரி எரிகா ஷீல்ட் ராஜினாமா செய்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.