ஹோம் /நியூஸ் /உலகம் /

Long Night: 4 மாதங்களுக்கு அண்டார்டிகாவில் சூரியன் இருக்காது.. காரணம் என்ன?

Long Night: 4 மாதங்களுக்கு அண்டார்டிகாவில் சூரியன் இருக்காது.. காரணம் என்ன?

துருவ இரவு

துருவ இரவு

Astronomical polar night: துருவ பகுதிகளில் 24 மணி நேரத்துக்கும் மேலாக இரவு நீடிப்பதை துருவ இரவு (Polar night) என அழைப்பார்கள். அந்த வகையில், தற்போது தென் துருவத்தில் உள்ள அண்டார்டிகாவில் நீண்ட இரவு( Long night) தொடங்கியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  நீண்ட இரவு எனப்படும் Long night அண்டார்டிகா கண்டனத்தில் துவங்கியுள்ளது. இதன் காரணமாக கடந்த 4 மாதங்களுக்கு அண்டார்டிகாவில் சூரிய உதயம் இருக்காது. கண்டம் முழுவதும் இருள் மட்டுமே இருக்கும்.

  பூமியிம் அமைப்புக்கு ஏற்ப தென் துருவம் மற்றும் வட துருவத்தில் மிகவும் குளிர் அதிகமாக இருக்கும். குளிர் காலத்தில் இங்கு கடல் உட்பட அனைத்து நீர்நிலைகளும் பனிகட்டிகளாக மாறிவிடும். உலகில் பிற பகுதிகளில் குளிர்காலம்,  வசந்த காலம்,  கோடை காலம், இளையுதிர் காலம் என 4 காலங்கள் இருந்தாலும், துருவப் பகுதியை பொறுத்தவரை இரண்டே காலங்கள்தான்.

  ஒன்று நீண்ட  குளிர் காலம். இந்த காலத்தில் துருவப் பகுதி முழுவதுமே பனி போற்றியபடி காணப்படும். எலும்புகளை உறையவைக்கும் அளவுக்கு பனி இருக்கும். அடுத்தது கோடைகாலம். கோடை காலத்திலும் உலகின் பிற பகுதிகளை விட துருவபகுதிகளில் பனி சூழ்ந்தே காணப்படும். குளிர்காலம் அளவு கடுங்குளிர் இருக்காது என்பதுதான்  வித்தியாசம்.

  துருவ பகுதிகளில் 24 மணி நேரத்துக்கும் மேலாக இரவு நீடிப்பதை துருவ இரவு (Polar night) என அழைப்பார்கள். அந்த வகையில், தற்போது தென் துருவத்தில் உள்ள அண்டார்டிகாவில் நீண்ட இரவு( Long night) தொடங்கியுள்ளது. அங்கு கடைசியாக மே 13ம் தேதி சூரியன் உதித்து மறைந்தது. இதனையடுத்து அடுத்த 4 மாதங்களுக்கு அங்கு சூரியன் உதிக்காது. எங்கும் இருள் மட்டுமே இருக்கும்.

  இதையும் படிங்க: வடகொரியாவில் கொரோனாவுக்கு 15 லட்சம் பேர் பாதிப்பு- லாக்டவுன் - தென் கொரியா உதவியையும் ஏற்க மறுப்பு

  சூரியன் தொடுவானத்திலிருந்து 12 முதல் 18 டிகிரிக்கு கீழேயிருக்கும் போது வானியல்சார் துருவ இரவு ( Astronomical polar night) உண்டாகிறது. வட துருவத்தில் நவம்பர் 13 முதல் ஜனவரி 29 வரையும், தென் துருவத்தில் மே 11ம் தேதி முதல் ஆகஸ்ட் 1ம் தேதிவரி சூரியன் இருக்காது. ஐரோப்பாவின் கான்கார்டியா ஆராய்ச்சி நிலையத்தில் 12 ஆய்வாளர்களை கொண்ட குழுவினர் இந்த 4 மாதங்கள் அங்கு தங்கியிருந்து ஆராய்ச்சி மேற்கொள்ளவுள்ளனர்.

  Published by:Murugesh M
  First published:

  Tags: Antarctica, Winter