ஹோம் /நியூஸ் /உலகம் /

Miss World 2021: உலக அழகியாக மகுடம் சூடிய போலந்தின் கரோலினா பைலாஸ்கா!

Miss World 2021: உலக அழகியாக மகுடம் சூடிய போலந்தின் கரோலினா பைலாஸ்கா!

Miss World 2021 | இந்தியா சார்பில் இந்தப் போட்டியில் கலந்து கொண்ட தெலங்கானாவைச் சேர்ந்த மானசி வாரணாசி 13-வது இடம் பிடித்தார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  2021-ம் ஆண்டுக்கான உலக அழகியாக போலந்தின் கரோலினா பைலாஸ்கா (Karolina Bielawska) மகுடம் சூடியுள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கரான ஸ்ரீ சைனி 2-ம் இடம் பிடித்தார்.

  போர்டோ ரிகோவில் நடைபெற்ற 70-ம் ஆண்டு உலக அழகிப் போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்றனர். பாரம்பரிய உடை, நீச்சல் உடை என பல கட்டங்களாக நடந்த இந்தப் போட்டியில் அழகிகள் ஒய்யாரமாக நடந்து வந்து பார்வையாளர்கள் கண்களுக்கு விருந்து படைத்தனர்.

  அழகை மட்டுமல்லாது அழகிகளின் அறிவையும் சோதிக்கும் வகையில் இன்னும் கண்டுபிடிக்கப்படாத மிக முக்கியமான கண்டுபிடிப்பு எது என நடுவர்கள் வினவினர்.

  "உக்ரைன் மீதான போரை நிறுத்துங்கள்": ரஷ்ய அதிபர் புதினுக்கு நடிகர் அர்னால்டு கோரிக்கை

  அதற்கு பதிலளித்த கரோலினா, புதிதாக ஒன்றைக் கண்டறிய விரும்பினால், அதிக பச்சாதாபம், இரக்கம், நன்றியுணர்வு ஆகியவற்றில் பணக்காரராக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும் என கூறினார்.

  இந்த பதிலை தொடர்ந்து கரோலினா பைலாஸ்கா 2021-ம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு 2019- ஆம் ஆண்டு உலக அழகி போட்டியில் வெற்றி பெற்ற ஜமைக்காவின் Toni-Ann Singh மகுடம் சூட்டினார்.

  இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கரான ஸ்ரீ சைனி உலக அழகிப் போட்டியில் 2-ம் இடம் பிடித்தார். இந்தியா சார்பில் இந்தப் போட்டியில் கலந்து கொண்ட தெலங்கானாவைச் சேர்ந்த மானசி வாரணாசி 13-வது இடம் பிடித்தார். மிஸ் தெலங்கானா மற்றும் பெஃமினா மிஸ் இந்தியா 2020 அழகி பட்டங்களை மானசி வென்றுள்ளார்.

  Published by:Esakki Raja
  First published:

  Tags: Miss World, Poland