முகப்பு /செய்தி /உலகம் / உலகளாவிய சவால்களை இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து எதிர்கொள்ளும் - பிரதமர் மோடி

உலகளாவிய சவால்களை இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து எதிர்கொள்ளும் - பிரதமர் மோடி

நரேந்திர மோடி - ஜோ பைடன்

நரேந்திர மோடி - ஜோ பைடன்

உலகளாவிய முக்கிய சவால்களை இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து எதிர்கொள்ளும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

  • Last Updated :

dமூன்று நாள் அரசுமுறைப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி நேற்று வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகைக்கு சென்றார். அங்கு திரண்டிருந்த இந்திய வம்சாவளியினர் அவரை வரவேற்றனர். மேலும், பாரம்பரிய நடனத்துடன் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் பேசிய அதிபர் ஜோ பைடன், பிரதமர் மோடி தமக்கு ஏற்கனவே அறிமுகமானவர் என்றும், கடந்த 2014 மற்றும் 2016ம் ஆண்டுகளில் அவருடன் பேசும் வாய்ப்பு தமக்கு கிடைத்ததையும் நினைவு கூர்ந்தார். இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான நல்லுறவால், உலகளாவிய பல சவால்களை எதிர்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். 2006ம் ஆண்டு தாம் துணை அதிபராக இருந்த போது, 2020ம் ஆண்டில் இந்தியாவும், அமெரிக்காவும் நட்புறவில் மிக நெருங்கிய நாடுகளாக மாறும் என குறிப்பிட்டதாகவும், அது தற்போது நிறைவேறியுள்ளது எனவும் பைடன் தெரிவித்தார். காந்தியடிகளின் போதனைகளை சுட்டிக்காட்டிய அதிபர் பைடன், அக்டோபர் 2ம் தேதி அமெரிக்காவில் காந்தி ஜெயந்தியை கொண்டாட உள்ளதாகவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, வர்த்தகமும், தொழில்நுட்பமும் இருநாட்டு நல்லுறவை இயக்கி வருவதாக தெரிவித்தார். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக உறவு சிறப்பாக செயல்பட்டு வருவதாக கூறினார். அமெரிக்காவின் பல்வேறு அம்சங்கள் இந்தியாவுக்கு தேவை என குறிப்பிட்ட பிரதமர், இந்தியாவின் உதவியும் அமெரிக்காவுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என தெரிவித்தார். பின்னர் அதிபர் பைடனுடான சந்திப்பு குறித்து ட்விட்டரில் பதிவிட்ட பிரதமர் மோடி, கொரோனா, பருவநிலை மாற்றம் குறித்த சவால்களை கூட்டாக எதிர்கொள்வது குறித்து இருவரும் ஆலோசித்ததாகவும், இந்த சந்திப்பு மிகவும் ஆக்கப்பூர்வமாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக கடந்த 2013ம் ஆண்டு மும்பை வந்த போது, செய்தியாளர்கள் சிலர் தம்மிடம் இந்தியாவில் தமக்கு உறவினர்கள் உள்ளனரா என கேள்வி எழுப்பியதாகவும், பைடன் என்ற பெயரில் இந்தியாவில் 5 பேர் இருந்ததாக அவர்கள் கூறியதையும் அதிபர் ஜோ பைடன் நினைவு கூர்ந்தார். கிழக்கிந்திய தேநீர் நிறுவனத்தில் பணியாற்றிய கேப்டன் ஜார்ஜ் பைடன் தமது உறவினர் என்றும், அவர் இந்தியாவில் குடியேறியதாகவும் தெரிவித்த பைடன், வேறு பைடன்கள் இருந்தால் பிரதமர் மோடி கண்டுபிடித்து தர வேண்டும் என கூறினார். அப்போது அரங்கில் சிரிப்பலை எழுந்தது.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய பிரதமர் மோடி, இந்தியாவில் இருந்து நிறைய கோப்புகள் கொண்டு வந்திருப்பதாகவும், இந்த விவகாரத்தில் அது தங்களுக்கு உதவும் என நம்புவதாகவும் நகைச்சுவையாக கூறினார்.

top videos
    First published:

    Tags: Narendra Modi