ஹோம் /நியூஸ் /உலகம் /

G7 உச்சி மாநாட்டிக்காக ஜெர்மனி கிளம்பிய பிரதமர் மோடி

G7 உச்சி மாநாட்டிக்காக ஜெர்மனி கிளம்பிய பிரதமர் மோடி

ஜி 7 மாநாடு

ஜி 7 மாநாடு

G 7 summit : சுற்றுச்சூழல், எரிசக்தி, காலநிலை, உணவுப் பாதுகாப்பு, சுகாதாரம், பயங்கரவாத எதிர்ப்பு, பாலின சமத்துவம் மற்றும் ஜனநாயகம் போன்ற பிரச்சினைகள் குறித்து G7 நாடுகளுடன் விவாதிக்கப்படும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

ஜூன் 26-27 வரை திட்டமிடப்பட்ட G7 உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று  ஜெர்மனிக்கு புறப்பட்டார். அதோடு G7 மற்றும் விருந்தினர் நாடுகளுடன் சந்திப்புகளை நடத்த உள்ளார்.  சமகால பிரச்சினைகள் குறித்து கருத்துக்களை பரிமாறிக்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கனடா, பிரான்ஸ்,ஜெர்மனி,இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளின் கூட்டமைப்பு தான் ஜி7 நாடுகள். வளர்ந்த பொருளாதார கொள்கைகளோடு விளங்கிய நாடுகள் இணைந்து உலகளாவிய தலைமையை, ஆட்சியை கையில் வைத்திருக்க எண்ணித் தொடங்கப்பட்டது. ஆனால் காலப்போக்கில் மற்ற கூட்டமைப்புகள் உருவாக்கி அந்த நோக்கத்தை செயல்படுத்த ஆரம்பித்து விட்டது.

ஆனால் ஆண்டுதோறும் இந்த ஜி 7 நாடுகள் கூட்டம் நடத்தி, உலக பிரச்சனைகளுக்கு தங்களால் என்ன செய்ய முடியும் என்று விவாதித்து வருகிறது. அந்த வரிசையில் இந்த ஆண்டு ஜெர்மனியில் இந்த கூட்டம் நடக்கிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு, பிரதமர் மோடிக்கு ஜெர்மனி பிரதமர் ஒலாப் ஸ்கோல்ஸ் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த அழைப்பை ஏற்று ஜி-7 மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி நேற்று டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்றார்.

"சுற்றுச்சூழல், எரிசக்தி, காலநிலை, உணவுப் பாதுகாப்பு, சுகாதாரம், பயங்கரவாத எதிர்ப்பு, பாலின சமத்துவம் மற்றும் ஜனநாயகம் போன்ற பிரச்சினைகள் குறித்து G7 நாடுகள், G7 கூட்டாளி நாடுகள் மற்றும்  சர்வதேச அமைப்புகளுடன் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வேன்" என்று பிரதமர் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்தார்.

ஜூன் 26,27 G7 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு, பிரதமர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) க்கு ஜூன் 28, 2022 அன்று பயணம் செய்கிறார், முன்னாள் ஐக்கிய அரபு அமீரக அதிபரும் அபுதாபி ஆட்சியாளருமான ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யானின் மறைவுக்கு தனிப்பட்ட இரங்கல் தெரிவிக்கிறார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் புதிய அதிபராகவும், அபுதாபியின் ஆட்சியாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை வாழ்த்துவதற்கு பிரதமர் மோடி இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வார்” என்று அமைச்சக அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்சிமாநாட்டில் பங்கேற்கும் 12 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி இருதரப்பு சந்திப்புகளை நடத்த இருக்கிறார்.

ஜூன் 26: சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கும் சர்வதேச தினம்

மேலும் , ஐரோப்பிய நாடுகளுடனான நமது உறவுகளை வளப்படுத்தவும், உள்ளூர் பொருளாதாரத்திற்கு மகத்தான பங்களிப்பை அளிக்கும், ஐரோப்பா முழுவதிலும் உள்ள புலம்பெயர்ந்த இந்தியர்களைச் சந்திக்க ஆவலுடன் இருப்பதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

First published:

Tags: Germany, India, Narendra Modi