பூடான் சென்றார் பிரதமர் மோடி... மகிழ்ச்சி பொங்க வரவேற்ற அந்நாட்டு பிரதமர் லோடே ஷெரிங்

பிரதமரின் பூடான் பயணத்தில் இரண்டு நாடுகள் குறித்த முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Web Desk | news18-tamil
Updated: August 17, 2019, 8:05 PM IST
பூடான் சென்றார் பிரதமர் மோடி... மகிழ்ச்சி பொங்க வரவேற்ற அந்நாட்டு பிரதமர் லோடே ஷெரிங்
பூடானில் பிரதமர் மோடி
Web Desk | news18-tamil
Updated: August 17, 2019, 8:05 PM IST
பூடான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடியை, அந்நாட்டு பிரதமர் லோடே ஷெரிங் விமான நிலையம் சென்று வரவேற்றார்.

பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசுமுறை பயணமாக பூடான் சென்றுள்ளார். பாரோ விமான நிலையம் சென்றடைந்த பிரதமர் மோடியை, அந்நாட்டு பிரதமர் லோடே ஷெரிங் வரவேற்றார்.

தொடர்ந்து பூடான் குழந்தைகளும், அதிகாரிகளும் மலர்கொத்துகளை கொடுத்து வரவேற்றனர். அதை தொடர்ந்து பிரதமர் மோடிக்கு அரசு முறை வரவேற்பு அளிக்கப்பட்டது.


பாரா விமான நிலையத்திலிருந்து, பூடான் தலைநகர் திம்புவுக்கு பிரதமர் மோடி காரில் புறப்பட்டு சென்றார். அப்போது, சாலையோரம் திரண்டிருந்த மக்கள் இந்திய மற்றும் பூடான் தேசிய கொடிகளை அசைத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

திம்பு சென்றடைந்த பிரதமர் மோடியை, பூடான் வாழ் இந்தியர்கள் மகிழ்ச்சி பொங்க வரவேற்றனர். அவர்களிடம் பிரதமர் மோடி சிறிது நேரம் கலந்துரையாடினார்.

பின்னர் பூடான் மன்னர் ஜிக்மே சேஷர் நம்கியால் வாங்சுக்கை சந்திக்க பிரதமர் மோடி சென்றார். பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் டஷிச்சோஷாங் மாளிகைக்கு பிரதமர் மோடி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் மன்னர் மாளிகையில் அவருக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.

Loading...

பிரதமரின் பூடான் பயணத்தில் இரண்டு நாடுகள் குறித்த முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Also Watch: பிளாஸ்டிக்கை ஒழிக்க சொந்த சேமிப்பில் துணிப்பை வழங்கும் துபாய் சிறுவன்

First published: August 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...