21-ம் தேதி ரஷ்யா செல்கிறார் பிரதமர் மோடி

news18
Updated: May 14, 2018, 7:52 PM IST
21-ம் தேதி ரஷ்யா செல்கிறார் பிரதமர் மோடி
பிரதமர் மோடி
news18
Updated: May 14, 2018, 7:52 PM IST
ரஷ்ய அதிபருடன் உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வரும் 21-ம் தேதி பிரதமர் மோடி ரஷ்யா செல்ல இருக்கிறார்.

பிரதமர் மோடி பதவியேற்ற பிறகு வெளிநாட்டு உறவுகளை மேம்படுத்த பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் இருநாட்டு உறவுகளை மேம்படுத்த சீனாவுக்கு சென்று அதிபர் ஜீ ஜின்பிங்கை சந்தித்தார். சர்வதேச பிரச்சினைகள் மற்றும் இந்தியா-சீனா இடையிலான பல்வேறு முக்கிய விவகாரங்கள் பிரச்சினைகள் குறித்து விவாதித்து வந்தார். மேலும் இரண்டு நாட்களுக்கு முன் நேபாளம் சென்று அதிபர் பிதியா தேவி பந்தாரியை சந்தித்துவிட்டு நேற்று நாடு திரும்பினார்.

தற்போது உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்த வரும் 21-ம் தேதி சோச்சி நகருக்கு செல்ல இருப்பதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த பயணத்தின் போது உறவுகளை பலப்படுத்துவது குறித்தும் சர்வதேச பிரச்சினைகள் குறித்தும் இருநாட்டு தலைவர்களும் விவாதிப்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. சீனாவுக்கு அடுத்து பிரதமர் மோடி ரஷ்யா செல்ல இருப்பது முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
First published: May 14, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்