இலங்கை அதிபருடன் மோடி இன்று பேச்சுவார்த்தை

நரேந்திர மோடி (கோப்புப்படம்)

மாலையில் இலங்கையில் இருந்து நாடு திரும்பும் பிரதமர் மோடி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார்.

  • Last Updated :
  • Share this:
இலங்கைக்கு ஒரு நாள் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் சிறிசேனா உடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

மாலத்தீவு சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி அங்கிருந்து இன்று காலை இலங்கை செல்கிறார். ஒரு நாள் பயணமாக செல்லும் பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஆகியோரை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்த சந்திப்பின் போது ஈஸ்டர் தின குண்டுவெடிப்பு மற்றும் பயங்கரவாத அச்சுறுத்தல்களை முறியடிப்பது குறித்து மோடி ஆலோசிக்க உள்ளதாக குறப்படுகிறது. அதற்கு பின் எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் அதிபருமான ராஜபக்சேவை பிரதமர் மோடி சந்திக்க உள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளதாக அந்த கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு இலங்கையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மாலையில் இலங்கையில் இருந்து நாடு திரும்பும் பிரதமர் மோடி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார்.
Published by:Yuvaraj V
First published: