பிரதமர் மோடிக்கு குளோபல் கோல்கீப்பர் விருது

பிரதமர் மோடிக்கு குளோபல் கோல்கீப்பர் விருது
நரேந்திர மோடி
  • News18
  • Last Updated: September 25, 2019, 9:09 AM IST
  • Share this:
Sபில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேசன் அமைப்பின் சார்பில் பிரதமர் மோடிக்கு குளோபல் கோல்கீப்பர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸின் "பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேசன்" அமைப்பின் சார்பில் பிரதமர் மோடிக்கு குளோபல்கோல்கீப்பர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. தூய்மை இந்தியா திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியதற்காக பிரதமர் மோடிக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இந்த விருதை பில்கேட்ஸிடம் இருந்து பிரதமர் மோடி பெற்றுக் கொண்டார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, இந்த விருது தனக்கானது அல்ல என்றும் தூய்மையை அன்றாட வாழ்வில் கடைபிடித்து வரும் கோடிக்கணக்கான மக்களுக்கு உரித்தானது என்றும் பெருமிதம் தெரிவித்தார். 130 கோடி இந்திய மக்களுக்கு இந்த விருதை சமர்ப்பிக்கிறேன். மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தாள் வருடத்தில் இந்த விருதை வாங்குவது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறினார்.

மேலும் கடந்த 5 ஆண்டுகளில் 11 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் ஏழை எளிய மக்கள் மற்றும் பெண்கள் பயனடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Also watch

First published: September 25, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்