Home /News /international /

ஜி 7 மாநாட்டிற்காக ஜெர்மனி சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு

ஜி 7 மாநாட்டிற்காக ஜெர்மனி சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு

ஜெர்மனியில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

ஜெர்மனியில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

இரு நாள் ஜெர்மனி பயணத்தை முடித்த பின் பிரதமர் மோடி, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணம் மேற்கொள்கிறார்.

    ஜி 7 கூட்டமைப்பு நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று ஜெர்மனிக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, கனடா, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளின் கூட்டமைப்பு தான் ஜி 7 கூட்டமைப்பு. பொருளாதார ரீதியாக வளர்ந்து நாடுகளான இந்த நாட்டின் தலைவர்கள் ஆண்டு தோறும் பங்கேற்கும் உச்சி மாநாடு இந்தாண்டு ஜெர்மனியில் நடைபெறுகிறது. இந்த 48ஆவது ஜி 7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

    இதையடுத்து ஜெர்மனி சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு தரப்பட்டது. மேலும், ஜெர்மனியில் வாழும் இந்தியர்களும் விமான நிலையத்தில் பிரதமருக்கு ஆர்வத்துடன் வரவேற்பு தந்தனர். இந்த உச்சி மாநாட்டில் உக்ரைன் போர், சர்வதேச விலைவாசி உயர்வு, உணவு பொருள் தட்டுப்பாடு ஆகிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

    இந்த ஜி 7 மாநாடு குறித்து பிரதமர் மோடி கூறுகையில், 'இந்த கூட்டமைப்பில் மற்ற நாட்டு தலைவர்களுடன் எரிசக்தி, உணவு பாதுகாப்பு, பயங்கரவாத தடுப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவை குறித்து ஆலோசிக்கவுள்ளேன்' என்றார்.

    ஜெர்மனியில் வசிக்கும் இந்தியர்களுடன் பிரதமர் மோடி


    இந்த உச்சி மாநாட்டிற்குப் பின்னர் 12 நாடுகளின் தலைவர்களுடன் இரு தரப்பு பேச்சு வார்த்தை மேற்கொள்ளும் பிரதமர், ஜெர்மனி வாழ் இந்திய மக்கள் பங்கேற்கும் பொது நிகழ்விலும் உரையாற்றவுள்ளார்.

    இதையும் படிங்க: உக்ரைன் அகதிகளுக்கு கூகிள் பிக்சல் ஃபோன் -சுந்தர் பிச்சை!

    இரு நாள் ஜெர்மனி பயணத்தை முடித்த பின் பிரதமர் மோடி, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு அந்நாட்டின் முன்னாள் அதிபர் ஷேக் காலிபா பின் சயித் அல் நஹ்யானின் மறைவுக்கு அரச குடும்பத்திடம் நேரடியாக சென்று இரங்கல் தெரிவிக்கவுள்ளார்.
    Published by:Kannan V
    First published:

    Tags: PM Modi

    அடுத்த செய்தி