• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • வாட்டிகனில் போப் ஆண்டவரை சந்தித்த பிரதமர் மோடி - இந்தியா வரும்படி அழைப்பு!

வாட்டிகனில் போப் ஆண்டவரை சந்தித்த பிரதமர் மோடி - இந்தியா வரும்படி அழைப்பு!

வாட்டிகனில் போப் ஆண்டவரை சந்தித்த பிரதமர் மோடி - இந்தியா வரும்படி அழைப்பு!

வாட்டிகனில் போப் ஆண்டவரை சந்தித்த பிரதமர் மோடி - இந்தியா வரும்படி அழைப்பு!

வாட்டிகன் நகரில் போப் ஆண்டவரை நேரில் சந்தித்துப் பேசிய பிரதமர் மோடி, அவரை இந்தியா வரும்படி, அழைப்பு விடுத்துள்ளார். இந்த சந்திப்பு 20 நிமிடங்களுக்கு மட்டுமே திட்டமிடப்பட்டிருந்த நிலையில், சுமார் ஒரு மணி நேரம் வரை நீடித்ததாக பிடிஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

  • Share this:
    ஜி.20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி டெல்லியிலிருந்து, தனி விமானம் மூலம் நேற்றிரவு இத்தாலி சென்றடைந்தார். அங்கு ஐரோப்பிய யூனியன் தலைவர்களை சந்தித்து பேசினார்.

    ரோம் நகரில் இரண்டு நாட்களாக நடைபெறும், 16வது ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க இத்தாலி பிரதமர் மரியோ டிரகியின் அழைப்பை ஏற்று, பிரதமர் அங்கு சென்றுள்ளார். டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் ரோம் சென்ற பிரதமர் மோடிக்கு லியோனார்டோ டா வின்சி விமான நிலையத்தில் அரசு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பின்னர் ரோம் நகரில் ஐரோப்பிய யூனியன் தலைவர் சார்வலஸ் மிக்கேல், ஐரோப்பிய கமிஷன் தலைவர் உர்சுலா வொன் டெர் லேயன் ஆகியோரை கூட்டாக சந்தித்து பேசினார். ரோம் நகரில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு பிரதமர் மோடி மலர் அஞ்சலி செலுத்தினார். அப்போது அங்கு குவிந்த இத்தாலி வாழ் இந்தியர்கள் சமஸ்கிருதத்தில் பாட்டு பாடி மோடியை வரவேற்றனர்.



    தொடர்ந்து, இன்று காலை வாடிகன் நகரில் போப் ஆண்டவரை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு 20 நிமிடங்களுக்கு மட்டுமே திட்டமிடப்பட்டிருந்த நிலையில், சுமார் மணி ஒரு நேரம் வரை நீடித்ததாக பிடிஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. போப் பிரான்சிஸை சந்தித்த பின்னர் பிரதமர் நரேந்திர மோடி வாடிகன் நகரில் இருந்து புறப்பட்டார். அவருடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரும் சென்றனர்.



    தொடர்ந்து, நடைபெறும், ஜி 20 உறுப்பு நாடுகளின் மாநாட்டில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரேசில் அதிபர் பால்சோனோரோ, தென்கொரிய அதிபர் மூன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். கொரோனாவுக்கு பிறகான பொருளாதார மீட்பு நடவடிக்கைகள். பருவ நிலை மாற்றம், நீடித்த வளர்ச்சி, உணவு பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து உச்சி மாநாட்டில் ஆலோசனை நடத்தப்படுகிறது.

    ஜி20 மாநாட்டை தொடர்ந்து, பருவநிலை மாநாட்டில் பங்கேற்க கிளாஸ்கோ செல்லும் பிரதமர் மோடி நவம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் அங்கு நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்கிறார், அப்போது, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனையும் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: